பல்கலைக்கழகக் கல்வியாளர்களின் கருத்துரிமை தொடர்ந்து கட்டிக்காக்கப்படும்-ஸம்ரி அப்துல் காடிர்!
- Muthu Kumar
- 22 Oct, 2024
கோலாலம்பூர், அக். 22-
தத்தம் துறைகள், ஆராய்ச்சியுடன் சம்பந்தப்பட்டதாக இருக்குமாயின், பல்கலைக்கழகக் கல்வியாளர்களின் கருத்துரிமை தொடர்ந்து கட்டிக்காக்கப்படும் என்று உயர்கல்வியமைச்சர் ஸம்ரி அப்துல் காடிர் நேற்று உறுதியளித்தார். கல்வியாளர்கள் தங்களின் கருத்துகளையும், திட்டங்களையும் பகிர்ந்து கொள்வதற்கு பல்கலைக்கழகங்கள் கட்டுப்பாடு விதிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.
பல்கலைக்கழகங்களில் கல்வியாளர்களின் கருத்துரிமை கட்டிக்காக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன் என புத்ராஜெயாவில் கல்வி மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் ஸம்ரி குறிப்பிட்டார்.குறிப்பாக, அரசாங்கத்தை இழிவுபடுத்தும் அல்லது அதன் கொள்கைகள் மற்றும் முடிவுகளில் காணப்படும் பலவீனங்களை அம்பலப்படுத்தும் வகையிலான பொது அறிக்கைகளை தன்னுடைய ஊழியர்கள் வெளியிடக்கூடாது என்று மலேசிய தேசிய பல்கலைக்கழகம் (யூகேஎம்) அண்மையில் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
பல்கலைக்கழகப் பதிவாளரின் கடமைகளுக்குப் பொறுப்பாளரான ஸைனுடின் டாவுட் என்பவர் அதனை வெளியிட்டுள்ளார். அதன் பிரதியொன்று சமூக ஊடகங்களிலும் வெளியாகி உள்ளது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உத்தரவிட்டாலொழிய பொது அறிக்கைகளை வெளியிடும் அதிகாரம் அரசுப் பணியாளர்கள் எவருக்கும் கிடையாது என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் அந்த சுற்றறிக்கையில் நினைவூட்டியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *