இருவரைத் தாக்கிய புலி! இந்தப் பகுதிகளில் எச்சரிக்கையாக இருங்கள்!
- Shan Siva
- 18 Oct, 2024
ஈப்போ, அக் 18:
வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறை கெரிக், பேராக் மற்றும் ஜெலி, கிளந்தான் இடையே கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, வாகன ஓட்டிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அந்தப் பகுதியில் சமீபத்தில் நடந்த இரண்டு புலித் தாக்குதல்களைத் தொடர்ந்து பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பேராக் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறை இயக்குனரான யூசப் ஷெரீப் எடுத்துரைத்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, பெர்சியாவில் 54 வயதுடைய நபர், கெரிக் நெடுஞ்சாலையின் KM79 இல் பாகான் பாலாக்கில் புலியால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, நேற்று ஜெலி, பத்து மெலிந்தாங்கில் உள்ள மிளகாய்ப் பண்ணைக்கு அருகே, மியான்மர் நாட்டவர் ஒருவரும் புலியால் தாக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்தத் தாக்குதல்களுக்கான அடிப்படைக் காரணத்தை தாங்கள் ஆராய்ந்து வருவதாக யூசப் விளக்கினார்.
மேலும், பொறிகளை அமைத்துள்ளதாகவும், பணியாளர்கள் அப்பகுதியை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *