சுரங்கத்துக்குள் உலகின் ஆழமான ஹோட்டல்

top-news
FREE WEBSITE AD

இங்கிலாந்து நாட்டின் எல்லைக்கு உட்பட்ட வேல்ஸ் நாட்டில் உள்ள Snowdonia எனும் மலைப்பகுதியின் அடிவாரத்தில், 1810 முதல் செயல்பட்டு வந்த சுரங்கம் ஒன்று 1939 ஆம் ஆண்டு கைவிடப்பட்டது. இந்த சுரங்கத்துக்குள், 1,375 அடி ஆழத்தில் Deep Sleep எனும் பெயரில் ஹோட்டல் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2023ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இதுவே உலகின் ஆழமான ஹோட்டல் என்று வர்ணிக்கப்படுகிறது.

இந்த ஹோட்டலை அடைவது அத்தனை சாதாரணமான விஷயம் கிடையாது. சுரங்கத்துக்குள், பழைய படிக்கட்டுகள், பாலங்கள் வழியாக மிகவும் துணிச்சலான அனுபவத்துடன் ஒரு ட்ரெக்கிங் பயணத்தை கடந்து தான் இந்த ஹோட்டலை அடைய முடியும். ஒரு மணி நேர ட்ரெக்கிங்கின் போது, ஒரு வழிகாட்டி நம்மிடம், சுற்றுச்சூழல் பற்றிய ஏராளமான வரலாற்று தகவல்களை வழங்குவார்.

இந்த Deep Sleep ஹோட்டல், வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே செயல்படுகிறது. அதாவது சனிக்கிழமை மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை நாம் இங்கு தங்கலாம். இங்கு நான்கு காட்டேஜ் ரூம்களும், ஒரு ஹனிமூன் சூட் ரூமும் உள்ளது. ஒவ்வொரு ரூமிலும் இரண்டு பேர் தங்க முடியும். 14 வயதுக்கு மேற்பட்ட நல்ல உடல்நிலை கொண்ட யார் வேண்டுமானாலும் இங்கு சென்று தங்க அனுமதிக்கப்படுகிறது. காட்டேஜ் ரூம்களுக்கு ஒரு இரவுக்கு சுமார் 414 அமெரிக்க டாலரும்  ஹனிமூன் சூட் ரூமுக்கு ஒரு இரவுக்கு சுமார் 645 அமெரிக்க டாலரும்  கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த ரூம்களை பதிவு செய்த பின்னர், சனிக்கிழமை 5 மணியளவில் மலையடிவாரத்து முகாமுக்கு வந்துசேர வேண்டும். அங்கு உங்களுக்கு லைட் பொருத்தப்பட்ட ஹெல்மெட், ஷூ  உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும். அவற்றை அணிந்துகொண்டு, வழிகாட்டியுடன் வெளி உலகிற்கு குட்பை சொல்லிவிட்டு பாதாளத்துக்குள் பயணிக்கத்தொடங்கிவிட வேண்டியது தான். பழைய சுரங்கத்தினுள் 1,375 அடி ஆழத்துக்கு, ஒரு மணிநேர கடினமான மலையேற்ற அனுபவத்துக்கு பின்னர், தங்குமிடத்தை அடைவீர்கள். அங்கே அடைந்தவுடன் உங்களுக்கு வெல்கம் டிரிங்ஸ், இரவு உணவு வழங்கப்படும்.

இங்கே டாய்லெட் வசதியும் உள்ளது. உங்களது அறைக்கு சென்று தூங்கி பின்னர் மறுநாள் காலை எழுந்ததும், டீ, காபி போன்ற பானங்களும், காலை உணவும் வழங்கப்படும். மீண்டும் நம் வழிகாட்டியுடன் 1375 அடி உயர பயணித்து பேஸ் கேம்பை அடையலாம். உங்களுக்கு இங்கே சைவம் மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *