பரபரப்பாகத் தொடங்கியது ஆயர் கூனிங் இடைத் தேர்தல்! 7.30 மணிக்கே வாக்களிக்க வந்த மக்கள்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப்ரல் 26: ஆயர் குனிங் இடைத்தேர்தல் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 19 வாக்குச்சாவடிகளும் காலை 8 மணி முதல் செயலில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் 18 வாக்குச்சாவடிகள் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் என்றும், Sekolah Kebangsaan Toh Tandewa Sakti  வாக்குச்சாவடி மாலை 4 மணிக்கு மூடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

பேராக்கில் உள்ள மாநிலத் தொகுதிக்கு புதிய சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்காக இன்று மொத்தம் 31,281 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

வானம் மேக மூட்டமாக இருந்தபோதிலும், முதல் முறையாக வாக்களிக்க வருபவர்கள் முதல், மூத்த குடிமக்கள் வரை காலை 7.30 மணிக்கே வாக்குச்சாவடிகளுக்கு வரத் தொடங்கினர்.

கடந்த செவ்வாய்க்கிழமை, 582 காவல்துறை அதிகாரிகளில் 90% க்கும் மேற்பட்டோர் மற்றும் அவர்களது மனைவிகள் இடைத்தேர்தலுக்கான ஆரம்ப வாக்களிப்பு செயல்முறையின் போது தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றினர்.

தாப்பாவில் உள்ள டேவான் மெர்டேகாவில் உள்ள அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும், இன்று இரவு 9 மணியளவில் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யர் குனிங் இடைத்தேர்தலில், பாரிசன் நேஷனலின் அம்னோவின் யுஸ்ரி பக்கீர், பெரிகாத்தான் நேஷனல் சார்பில் பாஸ் கட்சியின் அப்துல் முஹைமின் மாலேக் மற்றும் பி.எஸ்,எம் கட்யின் கே.எஸ். பவானி ஆகியோர் மும்முனைப் போட்டியைக் காண்கிறார்கள்.  

கடந்த பொதுத் தேர்தலில் (GE15) 2,213 வாக்குகள் பெரும்பான்மையுடன் ஐந்து முனைப் போட்டியில் வெற்றி பெற்ற அம்னோ சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருதீன் பிப்ரவரி 22 அன்று இறந்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது!

Pilihan Raya Kecil Ayer Kuning berlangsung hari ini dengan 31,281 pengundi layak mengundi. Tiga calon bertanding: BN, PN dan PSM. Proses pengundian bermula jam 8 pagi di 19 pusat mengundi. Keputusan rasmi dijangka diumum jam 9 malam di Dewan Merdeka, Tapah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *