குறைந்தபட்ச ஊதியம் அனைத்து நிலையிலான தொழிலாளர்களுக்கும் இருக்க கூடாது-ஸ்டீவன் சிம்!

top-news
FREE WEBSITE AD

பண்டார் பெர்மைசூரி, அக் 21:

பட்டதாரிகள் உட்பட அனைத்து நிலையிலான ஊழியர்களுக்கும் புதிய குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை ஆரம்பக்கட்ட  சம்பளமாக பயன்படுத்துவதற்கு எதிராக முதலாளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறுகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை 2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் RM1,500 லிருந்து RM1,700 ஆக உயர்த்தப்பட்டது.

ஊழியர்களின் திறன்கள் மற்றும் கல்வித் தகுதிகளைப் பிரதிபலிக்கும் வகையில் சம்பளம் வழங்குவது நல்லது. குறைந்தபட்ச ஊதியம் அனைத்து நிலையிலான தொழிலாளர்களுக்கும் சம்பளத்தைத் தொடங்குவதற்கான அளவுகோலாக இருக்கக்கூடாது.குறைந்தபட்ச ஊதியத்தில் இந்த சரிசெய்தல் என்பது மிக அடிப்படையான தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஓர் உத்தியாகும், குறிப்பாக தற்போது RM1,700க்குக் கீழே சம்பாதிக்கும் 4.35 மில்லியன் தனிநபர்களுக்கு பொருந்தும் என்று அவர் விளக்கினார்.

கல்வித் தகுதிகள், வேலைக்கான பதவித் தகுதிகள் மற்றும் திறன்களுடன் சம்பளத்தை சீரமைப்பதன் மூலம், நிறுவனங்களும் பயனடையலாம். ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்படாவிட்டால், திறமையை இழக்க நேரிடும் மற்றும் திறமையான மனிதவளத்தை ஈர்ப்பதில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் இன்று திரெங்கானுவின் மெராங்கில் நடந்த ஒரு நிகழ்வில் கூறினார்!



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *