உள்துறை அமைச்சில் RM 15 மில்லியன் ஊழல்! காவல் அதிகாரிகள் உட்பட அறுவர் கைது!

- Sangeetha K Loganathan
- 25 Apr, 2025
ஏப்ரல் 25,
உள்துறை அமைச்சின் தொடர்புக் கண்காணிப்பு மேம்பாட்டுத் துறையான C4i துறையின் மூலமாகக் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலானச் செலவீனங்களில் RM 15 மில்லியன் ரிங்கிட் வரையில் ஊழல் நிகழ்ந்திருப்பதாகச் சந்தேகித்த லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் 2 காவல் அதிகாரிகள் உட்பட 6 பேரைக் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 6 பேரையும் 7 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கும்படி புத்ராஜெயா Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையில் மொத்தம் 70 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டிருக்கும் நிலையில் சுமார் 15 மில்லியனுக்கும் மேலான நிதி கையாடப்பட்டிருப்பதாகவும் முக்கிய நிறுவனங்களின் தலைமை கணக்காய்வாளர் ஒருவர், தலைமை இயக்குநர் ஒருவர், 2 காவல் அதிகாரிகள் என அனைவரையும் ஜொகூர், சிலாங்கூர், புத்ராஜெயா என 15 இடங்களில் பின்தொடர்ந்து கைது செய்யப்பட்டதாகவும் SPRM சிறப்புப் படை இயக்குநர் Datuk Mohamad Zamri Zainul Abidin தெரிவித்தார்.
SPRM menahan enam individu termasuk dua pegawai polis berkaitan skandal rasuah RM15 juta melibatkan perbelanjaan C4i di Kementerian Dalam Negeri dari 2022 hingga 2025. Mereka ditahan reman tujuh hari bagi membantu siasatan penyelewengan dana melibatkan RM70 juta keseluruhan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *