3 மோட்டார் சைக்கிள்கள் விபத்து! ஒருவர் பலி!

top-news

அக்தோபர் 24,

குவாந்தானிலிருந்து ஜெங்கா செல்லும் சாலையில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலியானதுடன் இருவர் படுகாயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை வேலைக்குச் செல்லும் போது, எதிர்பாராத விதமாக மாடு குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளோட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆடவர் ஒருவர் பலியானதுடன் மேலும் இரு மோட்டார் சைக்கிளோட்டிகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் குவாந்தான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang maut dan dua cedera dalam kemalangan di jalan Jengka 18 ke Jengka 19 selepas tiga motosikal melanggar kerbau

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *