மின்கம்பத்தை மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் பலி!

- Sangeetha K Loganathan
- 27 Apr, 2025
ஏப்ரல் 27,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மின்கம்பத்தை மோதி விபத்துக்குள்ளானதில் 32 வயது வாகனமோட்டி சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். இன்று அதிகாலை 5 மணியளவில் Kampung Jawa சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாக TAWAU மாவட்ட மீட்பு ஆணையத்தின் இயக்குநர் JEMISHIN UJIN தெரிவித்தார்.
அதிகாலை 5.13 மணிக்கு விபத்துக் குறித்தது பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் 10 மட்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வாகனத்தி்னுள் சிக்கியிரு்த இளைஞரை மீட்டதாகவும் உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் TAWAU மாவட்ட மீட்பு ஆணையத்தின் இயக்குநர் JEMISHIN UJIN தெரிவித்தார். விபத்து ஏற்பட்டதற்கானக் காரணத்தைக் காவல்துறையினர் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang lelaki berusia 32 tahun maut selepas kenderaannya hilang kawalan dan melanggar tiang elektrik di Jalan Kampung Jawa, Tawau. Pasukan penyelamat mengeluarkan mangsa dari kenderaan dan membawanya ke hospital untuk bedah siasat. Siasatan lanjut dijalankan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *