ஆற்றில் கவிழ்ந்த வாகனம்! சிறுமி பலி! தந்தை காணவில்லை!

- Sangeetha K Loganathan
- 15 Apr, 2025
ஏப்ரல் 15,
நேற்று இரவு மரப்பலகையிலான ஆற்றுப் பாலத்தைக் கடக்கும் போது வாகனம் சறுக்கி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 வயது சிறுமி ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததுடன் 46 வயது தந்தையும் வாகனமோட்டியுமான Dawellies Luing ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார். நேற்று இரவு 10 மணியளவில் சரவாக்கில் உள்ள Ulu Baram ஆற்றில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் 9 வயது சிறுமி பொதுமக்களால் ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட நிலையில் 46 வயது ஆடவரை மீட்புப் படையினர் தேடி வருவதாகச் சரவாக் மாநில மீட்பு ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
காட்டுப்பகுதியின் நடுவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் சுமார் 10 முதல் 12 மணிநேரங்கள் பயணித்து சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் மூவர் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் பெண் ஒருவர் மயக்க நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 9 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மேலதிகமாக 46 வயது ஆடவரையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sebuah kenderaan terjatuh ke dalam Sungai Ulu Baram menyebabkan seorang kanak-kanak perempuan berusia 9 tahun maut dan bapanya berusia 46 tahun hilang. Operasi mencari dan menyelamat masih diteruskan oleh pasukan penyelamat Sarawak.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *