RM20,000 மதிப்பிலானக் கேபிள்களைத் திருடிய இளைஞர் கைது!

top-news

ஏப்ரல் 15,

மைவி வாகனத்தில் ஆடவர் ஒருவர் கேபிள்களைத் திருடும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட மைவி வாகனமோட்டியைக் காவல் துறையினர் கைது செய்ததாக Kuala Muda, மாவட்டக் காவல் ஆணையர் Wan Azharuddin Wan Ismail தெரிவித்தார். இன்று நண்பகல் Laguna Merbok பகுதியில் உள்ள தண்டவாள மின் கேபிள்களைக் காணவில்லை என KTMB நிறுவனத்திடமிருந்து புகார் கிடைத்த நிலையில் சம்மந்தப்பட்ட மைவி வாகனமோட்டி வாகனத்துடன் கைது செய்யப்பட்டதாக Wan Azharuddin Wan Ismail தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட மைவி வாகனமோட்டி கேபிள்களைத் திருடும் போது எடுக்கப்பட்ட காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதால் வாகனத்தை Jalan Prima Residensi Utama குடியிருப்புப் பகுதியின் பின் பக்கத்தில் மறைத்து வாகனத்திலேயே இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக Wan Azharuddin Wan Ismail தெரிவித்தார். சம்மந்தப்பட்ட மைவி வாகனத்திலிருந்து சுமார் 200 மீட்டர் நீளமுள்ள கேபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதன் மதிப்பு சுமார் RM20,000 என Kuala Muda, மாவட்டக் காவல் ஆணையர் Wan Azharuddin Wan Ismail தெரிவித்தார்.

Seorang lelaki ditahan selepas video dirinya mencuri kabel elektrik tular di media sosial. Suspek ditahan bersama sebuah kereta Myvi dan kabel sepanjang 200 meter bernilai RM20,000 yang dicuri dari landasan KTMB di Laguna Merbok.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *