சிறு நெல்லி மற்றும் பெரு நெல்லி மகிமைகள்!

top-news
FREE WEBSITE AD

பழங்களில் இனிப்பு,புளிப்பு மற்றும் துவர்ப்பு என்று மூன்று சுவைகளை கொண்ட பழமாக இருப்பது நெல்லிக்காய் தான்.இந்த நெல்லிக்காயில் மலை நெல்லி,சிறு நெல்லி என்று இருவகை கிடைக்கிறது.இந்த இரண்டு நெல்லிக்காயும் ஏகப்பட்ட மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இரண்டு நெல்லியிலும் வைட்டமின் சி சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.

பெரிய நெல்லி:

இந்த  பெரிய நெல்லி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.தலை முதல் பாதம் வரையிலான பல்வேறு நோய்களை குணப்படுத்த இந்த பெரிய நெல்லியை பயன்படுத்தி வருகின்றனர்.பெரிய நெல்லிக்காயை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

தினமும் ஒரு கிளாஸ் பெரிய நெல்லி ஜூஸ் பருகி வந்தால் வயிற்றுப்புண்கள் ஆறும்.தலைமுடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள் பெரிய நெல்லிக்காய் சாறு பருகி வந்தால் அடர்த்தியான முடி வளரும்.நெல்லி சாறு புற்றுநோய் செல்கள் வளர்வதை கட்டுப்படுத்துகிறது.

உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நெல்லிக்காயை அரைத்து சாறு எடுத்து பருகலாம்.நெஞ்சு சளி பிரச்சனை இருப்பவர்கள் பெரிய நெல்லிக்காயில் சூப் அல்லது ரசம் செய்து பருகலாம்.

தொண்டை கரகரப்பு குணமாக இரவு நேரத்தில் நெல்லிக்காய் சாறு அருந்தி வரலாம்.வைட்டமின் சி சத்து குறைபாடு இருப்பவர்கள் ஒரு கப் நீரில் நெல்லிக்காய் துண்டுகளை போட்டு ஊறவைத்து குடிக்கலாம்.உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு இருப்பவர்கள் பெரிய நெல்லிக்காய் சாறை பருகி வரலாம்.

சிறு நெல்லி:

இந்த நெல்லிக்காயில் வைட்டமின் சி,பொட்டாசியம்,கால்சியம்,மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இரத்த ஓட்டம் சீராக இருக்க சிறுநெல்லிக்காய் சாப்பிடலாம்.கண் பார்வை குறைபாடு இருப்பவர்கள் இந்த சிறு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

தினமும் இரவு சிறுநெல்லி சாறு பருகினால் நல்ல நிம்மதியான தூக்கம் வரும்.இளநரை பாதிப்பு இருப்பவர்கள் சிறு நெல்லிக்காயை அரைத்து சாறு எடுத்து பருகலாம்.இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் சிறு நெல்லிக்காயை அரைத்து ஜூஸாக சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.உடலில் பித்தம் குறைய சிறு நெல்லிக்காய் சாறை பருகி பலனடையலாம்.

நீர்ச்சத்து குறைபாடு இருப்பவர்கள் சிறு நெல்லிக்காய் ஜூஸ் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.உடல் சூடு முழுமையாக தணிய இந்த சிறு நெல்லிக்காயை அரைத்து சாறு எடுத்து பருகி வரலாம்.ஆகவே சிறு நெல்லி மற்றும் பெரு நெல்லி இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை ஆகும்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *