ஜலான் மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வில் உயிரிழந்த குடும்பத்திற்கு 10 ஆயிரம் வெள்ளியை வழங்கினார் ஓம்ஸ் பா.தியாகாராஜன்!
- Shan Siva
- 25 Oct, 2024
கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி, கோலாலம்பூர், ஜலான் மஸ்ஜித் இந்தியாவில் ஏற்பட்ட நில அமிழ்வுச் சம்பவத்தில் மாயமான, இந்தியாவைச் சேர்ந்த விஜயலெட்சுமி என்ற மாதுவின் மரணம், பெரும் துயரமாகிவிட்ட நிலையில். அன்னாரது குடும்பத்தினரை ஆறுதல்படுத்தும் விதமாக, அம்மாதுவின் மகன் சூர்யாவிடம் நிதி வழங்கும் நிகழ்வு இன்று தமிழ் மலர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன், மனித நேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் உட்பட பல முக்கிய பிரமுகர்கள், பொது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு நிதி வழங்கினர். முன்னதாக இறந்தவருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மலேசிய மக்களின் பேரன்புக்குத் தாம் தலைவணங்குவதாகவும், இங்குள்ள பத்திரிகைகள் மற்றும் ஊடக உறவுகளுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் விஜயலெட்சுமியின் மகன் சூர்யா தெரிவித்தார். மேலும், அம்மா இறந்துவிட்டதாக தான் இன்னும் நம்பவில்லை. ஏதோ கோபப்பட்டு போயிருக்கிறார் என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். இதுவரை அம்மா தொடர்பாக ஒரு சிறு பொருள் கூட கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தால் ஆறுதலாக இருந்திருக்கும் என்று அவர் நெகிழ்ச்சியாகக் கூறினார்.
நிகழ்வில் பேசிய ஓம்ஸ்
பா.தியாகராஜன் ஓர் எச்சரிக்கையை அந்த பெண்மணி விட்டுச் சென்றுள்ளார். இனி மக்கள்
பாதுகாப்பில் சம்பந்தப்பட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என
கேட்டுக்கொண்டார். மேலும், பிற நாடுகளில்
ஏற்படும் உயிரிழப்புகளுக்கு நம் நாடு உதவிகள் வழங்குவதை நாம் பார்க்கிறோம்.
அதேபோல், நம் இந்திய உறவுக்கு நாம்
வழங்குவது உணர்வுப்பூர்வமானது என்று அவர் கூறினார். அன்னாரது குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறினார். இந்நிகழ்வில் ஓம்ஸ்
பா.தியாகராஜன் 10 ஆயிரம் வெள்ளி
நிதி உதவி வழங்கினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *