கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு கிப்பன்கள் மற்றும் 52 பச்சை உடும்புகள் கடத்தல் முறியடிப்பு!
- Muthu Kumar
- 18 Oct, 2024
கோலாலம்பூர், அக்.18-
கடந்த வாரம் கோலாலம்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய மலேசிய பயணி ஒருவரிடம் இருந்து அழிந்து வரும் நிலையில் உள்ள பிராணிகளான நான்கு சியாமாங் கிப்பன்கள் மற்றும் 52 பச்சை உடும்புகளை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர்.
அக்டோபர் 16 அன்று. விமானப் புலனாய்வு அதிகாரிகள் தகவலின் பேரில் உளவுத்துறையின் பிரிவில் செயல்பட்ட ஒரு பெண் அதிகாரி மலேசியப் பயணியை இடைமறித்ததாக கங்கத் துறை கூறியது. அதே வேளையில், வெளிநாட்டுச் செல்லப்பிராணிகளைப் பெற வந்த சாரதியும் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆரம்ப ஆய்வுகளில் நான்கு சியாமாங் கிப்பன் (சிம்பாலாங்க சின்டாக்டைலஸ் மற்றும் 52 கிரீன் இருவாணா இருவானா உடும்பு கண்டுபிடிக்கப்பட்டன.
விலங்குகள் காற்று துவாரங்கள் கொண்ட பைகளில் மறைத்து அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்டன. மலேசியாவிற்கு மீண்டும் அவ்விலங்குகள் அனுப்பப்படுவதற்கு முன்னர் விலங்குகளின் சுகாதாரம் உறுதிப்படுத்தப்பட்டு உணவளிக்கப்பட்டன.
ஆகஸ்ட் மாதம் தாய்லாந்தில் இருந்து வந்த பயணிகளிடமிருந்து ஒரு கிப்பன் குரங்கு மற்றும் 22 பிற இனங்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியிருந்தனர். இந்திய நாட்டிலுள்ள மிகப்பெரிய அயல்நாட்டு இனங்கள் செல்லப்பிராணி வர்த்தகத்திற்கு வழங்க இந்த விலங்குகள் கொண்டுவரப்பட்டதாக ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *