தேசியக்கொடி வடிவமைப்பில் மீண்டும் தவறு நடந்துள்ளது- இம்முறை கல்வி அமைச்சு!

- Muthu Kumar
- 26 Apr, 2025
புத்ராஜெயா, ஏப். 26-
தேசியக் கொடி அல்லது ஜாலூர் கெமிலாங் வடிவமைப்பில் மீண்டும் தவறு நடந்திருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சில் அது நடந்துள்ளது.வியாழக்கிழமை வெளியிடப்பட்ட 2024ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் ஆய்வறிக்கையில் பிரசுரிக்கப்பட்டுள்ள தேசியக் கொடி வடிவமைப்பில் அந்தத் தவறு நிகழ்ந்திருக்கும் வேளையில், அதற்காக கல்வி அமைச்சு மன்னிப்புக் கேட்டிருக்கிறது.
இத்தகைய பெரும் தவறு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்று கூறிய கல்வி அமைச்சு, அதன் தொடர்பில் முழு விசாரணை ஒன்று நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தது. "வியாழக்கிழமை காலையில் வெளியிடப்பட்ட (எஸ்பிஎம் தேர்வு முடிவுகள்) ஆய்வறிக்கைகள் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். அதோடு, திருத்தங்களும் செய்யப்பட்டு வருகின்றன என்று. அறிக்கை ஒன்றில் கல்வி அமைச்சு தெரிவித்திருக்கிறது.
"நாட்டின் கௌரவத்தையும் இறையாண்மையையும் தேசியக் கொடி பிரதிபலிப்பதால், இத்தகைய கவனக் குறைவான போக்கை ஏற்றுக் கொள்ள முடியாது.இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் எதிராக கடுமையான மற்றும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவ்வறிக்கை கூறியது.
அந்த ஆய்வறிக்கையில், வகுப்பறையில் மாணவர்கள் இருக்கும் படம் இருந்தது. அதில் சுவரில் ஒரு நட்சத்திரத்திற்கு பதிலாக இரண்டு நட்சத்திரங்களுடன் தொங்கவிடப்பட்ட ஜாலூர் கெமிலாங் இருந்தது.அக்கொடியில் 14க்கு பதிலாக எட்டு சிவப்பு மற்றும் வெள்ளைக் கோடுகள் மாறி மாறி இருந்தன.
பிறை இல்லாமல் வடிவமைக்கப்பட்டிருந்த தேசியக் கொடியை பிரசுரித்ததன் மூலம், சின் சியூ நாளிதழ் கடந்த வாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதன் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதுடதன் அந்நாளிதழின் இரண்டு ஆசிரியர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.அத்தகைய சம்பவம் தொழில்நுட்பக் கோளாறினால் ஏற்பட்டதாகக் கூறி அப்பத்திரிகை மன்னிப்புக் கேட்டதுடன், விசாரணையின் முடிவு வெளிவரும் வரையில் தனது தலைமை ஆசிரியரையும் துணைத் தலைமை ஆசிரியரையும் அது இடைநீக்கமும் செய்திருக்கிறது.
பிறை இல்லாமல் தேசியக் கொடியை காட்டும் ஒரு முகநூல் பதிவு குறித்து குவோங் வா இட் போ நாளிதழும் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.கோலாலம்பூரில் நடந்த ஒரு வர்த்தகக் கண்காட்சியில் ஒரு சாவடியைத் திறந்திருந்த, சிங்கப்பூரை தளமாகக் கொண்டிருக்கும் சிறார் உணவு வியாபாரி ஒருவர், பிறை இல்லாத தேசியக் கொடியை காட்சிக்கு வைத்திருந்ததற்காக அண்மையில் மன்னிப்புக் கோட்டிருந்தார்.ஆகக் கடைசியாக, கல்வி அமைச்சில் இத்தகைய
Kementerian Pendidikan memohon maaf atas kesilapan bendera Jalur Gemilang dalam laporan analisis keputusan SPM 2024. Bendera itu menunjukkan dua bintang dan lapan jalur sahaja. KPM mengarahkan laporan ditarik balik serta disiasat, dan tindakan tegas diambil terhadap pihak terlibat demi menjaga maruah negara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *