போலீஸ் காவலில் AI நிர்வாண போட்டோ ஆசாமிகள்!

- Shan Siva
- 16 Apr, 2025
பெட்டாலிங் ஜெயா:
ஜொகூரில் AI மூலம் உருவாக்கப்பட்ட
போலி நிர்வாணப் படங்களைப் பரப்புதல் மற்றும் விற்பனை செய்தது தொடர்பான
விசாரணைகளுக்கு உதவுவதற்காக இரண்டு பதின்ம வயது இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார்
காவலில் எடுத்துள்ளனர்.
இஸ்கண்டார்
புத்ரி போலீசார் இன்று முன்னதாக மாஜிஸ்திரேட் நபிலா நிஜாமிடமிருந்து ரிமாண்ட்
உத்தரவுகளைப் பெற்றனர்.
சந்தேக நபர்களில்
ஒருவரான 16 வயது ஆடவன் ஞாயிற்றுக்கிழமை வரை ஐந்து நாட்கள் ரிமாண்ட்
செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் 19 வயதுடைய மற்றொரு சந்தேக
நபருக்கு ஆறு நாட்கள் ரிமாண்ட் வழங்கப்பட்டது.
ஜொகூர் போலீசார் 16 வயது
சிறுவனைக் கைது செய்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. அவர் AI மூலம் சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் படங்களை நிர்வாணமாக
மாற்றி அவற்றை ஆன்லைனில் ஒவ்வொன்றும் RM2க்கு விற்றதாகக் கூறப்படுகிறது.
இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான 18 வயது பெண் போலீஸில் புகார் கொடுத்ததை அடுத்து இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்ததாக ஜொகூர் காவல்துறைத் தலைவர் எம் குமார் தெரிவித்தார்!
Dua remaja ditahan polis di Johor kerana disyaki menyebar dan menjual gambar bogel palsu berasaskan AI. Mereka disiasat di bawah undang-undang jenayah seksual terhadap kanak-kanak dan komunikasi. Kes terbongkar selepas laporan polis dibuat oleh mangsa berumur 18 tahun.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *