கூபர் பெடி என்று அழைக்கப்படும் பூமிக்கு அடியில் ஒரு கிராமம்!

- Muthu Kumar
- 27 Dec, 2024
உலகின் மிக மர்மமான கிராமம் என்று அழைக்கப்படும் கூபர் பெடி, நிலத்தடி வாழ்க்கை முறை மற்றும் சர்ரியல் நிலப்பரப்புகளுக்கு புகழ் பெற்றது.
"உலகின் ஓப்பல் தலைநகரம்" என்று அழைக்கப்படும் இந்த தனித்துவமான நகரம், சூடான பாலைவன வெப்பத்திலிருந்து தப்பிக்க பூமியில் அமைக்கப்பட்டுள்ளது, வீடுகள், கடைகள் மற்றும் தேவாலயங்கள் கூட மேற்பரப்பிற்கு அடியில் அமைக்கப்பட்டுள்ளன. நிலத்திற்கு அடியில் அமைந்திருக்கும் இந்த வினோத கிராமம் பார்ப்பவர்களுக்கு மிகவும் வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது. இந்த நிலத்தடி கிராமம், எதனால் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
பூமிக்கு அடியில் கிராமமா? கேக்கவே விசித்திரமாக இருக்கின்றதா.. ஆனால் தெற்கு ஆஸ்திரேலியாவில் கூப்பர் பேடி என்றழைக்கப்படும் கிராமம் முழுவதுமே பூமிக்கு அடியில் தான் இருக்கிறதாம். இங்கு வீடுகள் மட்டுமின்றி, அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தேவாலயம், திரையரங்குகள், அருங்காட்சியகம், பார் மற்றும் ஹோட்டல் என அனைத்தும் காணப்படுகின்றது. இந்த நிலத்தடி கிராமத்தில் இணைய வசதி கூட உள்ளதாம். இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தைப் பற்றி நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் ஏராளம்.
டெல்லியின் கனாட் பிளேஸில் அமைந்துள்ள பாலிகா பஜார் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. அது ஒரு அண்டர்கிரவுண்ட் மார்கெட், இந்த சந்தை இந்தியா முழுவதும் பிரபலமான ஒன்று தான்.
ஆனால் இங்கு ஒரு கிராம மக்களே அண்டர்க்ரவுண்டில் வாழ்ந்து வருகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அந்த தனித்துவமான கிராமத்தின் பெயர் 'கூப்பர் பேடி', இது தெற்கு ஆஸ்திரேலியாவில் அடிலாய்டு பிராந்தியத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், இங்குள்ள அனைத்து மக்களும் நிலத்தடியில் அமைந்துள்ள வீடுகளில் வாழ்கின்றனர். இந்த வீடுகள் வெளியில் இருந்து பார்க்கும்போது சாதாரணமாகத் தோன்றலாம், ஆனால் உள்ளே சென்று பார்த்தால் அனைத்து வசதிகளையும் கொண்ட ஸ்டார் ஹோட்டல்களைப் போல இருக்கும்.
பாலைவனமாக இருந்த இந்த கூப்பர் பேடி கிராமத்தில் சுரங்கப் பணிகள் 1915 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. இது ஆரம்பத்தில் மாணிக்கக்கல் எடுக்கும் சுரங்கமாக இருந்தது. இப்பகுதியில் சுரங்கங்கள் தோன்றிய பின்னர், மக்கள் காலியாக உள்ள சுரங்கங்களின் உள்ளே சென்று வாழத் தொடங்கியுள்ளனர். நாளடைவில் இங்கு காலத்திற்கு ஏற்ப தட்ப வெப்பநிலை சரியாக இல்லாமல் மக்கள் அவதிப்பட்டுள்ளனர்.
கோடைக்காலத்தில் இங்கு வெப்பநிலை 45டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் பூமியைக் குடைந்து குடியேறியுள்ளனர். பூமிக்கு உள்ள குடியேறிய பின்னர் கோடை மற்றும் குளிர் காலங்களில் எந்தவொரு கஷ்டமும் இல்லாமல் தட்ப வெப்பநிலை சீராக இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த கிராமத்தில் 1500 வீடுகள் இருப்பதுடன் 3500க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலத்தடி வீடுகள் வெளியில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாகத் தோன்றினாலும் உள்ளே சென்று பார்த்தால் நம்மை வியக்க வைக்கிறது. எல்லா வீடுகளிலும் அனைத்து நவீன வசதிகளையும் அவர்கள் தயார் செய்து வைத்துள்ளனர். இங்கு வீடுகள் மட்டுமின்றி மக்கள் அவர்கள் அலுவலகங்களையும் நிறுவியுள்ளனர். அது மட்டுமின்றி, பூமிக்கு கீழே தேவாலயங்கள், திரையரங்குகள், அருங்காட்சியகங்கள், ஹோட்டல்கள், பார்கள் என அனைத்து வசதியுமே உள்ளதாம்.
கூப்பர் பேடியின் கிராமத்தில் உள்ள நிலத்தடி வீடுகளுக்கு கோடையில் ஏ.சியோ அல்லது குளிர்காலத்தில் ஹீட்டர்களோ தேவைப்படுவது இல்லை.இவர்களுக்கு தண்ணீர் 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருக்கிற பகுதியிலிருந்து குழாய் மூலமாக கொண்டு வரப்படுகிறது. பூமிக்கடியில் கீழே கட்டப்பட்ட இந்த வீடுகளில் அனைத்து வகையான வசதிகளும் உள்ளன. இது உலக அளவில் பேமஸ் ஆனதால், இங்கு பல ஹாலிவுட் படங்களும் படமாக்கப்பட்டுள்ளன. 2000 ஆம் ஆண்டு வெளியான 'பிட்ச் பிளாக்' படம் இங்குதான் எடுக்கப்பட்டதாம். அதன் பின்னர், கூப்பர் பேடி இப்போது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையமாக மாறியுள்ளது. மக்கள் இங்கு சுற்றுலாவிற்காக வந்து செல்கிறார்கள். சுற்றுலா மூலம் கூப்பர் பேடி கிராமம் கணிசமான வருவாயை ஈட்டுகிறது.
இந்த இடத்தில் உள்ள வசதிகள்!
1. நிலத்தடி வீடுகள் மற்றும் தேவாலயங்கள்: செயின்ட் பீட்டர் & பால் கத்தோலிக்க தேவாலயம் மற்றும் பாறையில் செதுக்கப்பட்ட வீடுகள் உள்ளிட்ட தோண்டிகளின் தனித்துவமான கட்டிடக்கலையை பார்வையாளர்கள் ஆராயலாம்.
2. ஓப்பல் சுரங்கங்கள்: வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்கள் ஓப்பல் சுரங்கங்கள் வழியாக உங்களை அழைத்துச் செல்கின்றன, இந்த விலைமதிப்பற்ற ரத்தின சுரங்கத்தின் வரலாறு மற்றும் செயல்முறையைக் காண்பிக்கும்.
3. நிலவு போன்ற நிலப்பரப்பு: சுற்றியுள்ள பாலைவன நிலப்பரப்பு சந்திர மேற்பரப்பை ஒத்திருக்கிறது, இது திரைப்படங்களுக்கான பிரபலமான இடமாக அமைகிறது.
4. பிக் வின்ச் சினிக் லுக்அவுட்: நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் பரந்த காட்சிகளை அனுபவிக்க ஒரு சிறந்த இடம்.
நீங்கள் ஆஸ்திரேலியா சென்றால் இது போன்ற இடம் சென்று மகிழ்ந்து வாருங்கள்...
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *