பாஸ் கட்சியின் அரைவேக்காட்டுக் கதை!
- Shan Siva
- 21 Oct, 2024
கோலாலம்பூர், அக் 21: PAS கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி, மக்களைக் குழப்புவதற்காக அரசாங்கத்தின் RON 95 பெட்ரோல் இலக்கு
மானியத் திட்டம் குறித்து தவறான கதைகளை உருவாக்க முயற்சிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உதவியாளர்
கமில் முனிம் குற்றம் சாட்டியுள்ளார்.
வெளிநாட்டினர் மற்றும் T15 வகையைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் 40 விழுக்காடு மானிய விலை பெட்ரோலுக்கு முற்றுப்புள்ளி
வைப்பதே இந்த இலக்கு மானியத் திட்டம் என்று அவர் கூறினார்.
பிகேஆர் இளைஞர் துணைத் தலைவரான
கமில்,
அரைகுறையான அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன் புத்ராஜெயாவின்
முன்மொழிவை ஃபத்லி புரிந்துகொண்டு முழுமையாக ஆராய வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
இந்த திட்டத்தால் 85 விழுக்காடு மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார். (Fadhli) இதைக் குறிப்பிடவில்லை, ஆனால் அரசாங்கம் மானியங்களைத் திரும்பப் பெற விரும்புகிறது என்ற
அரைவேக்காட்டுக் கதையை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறார் என்று கமில் கடுமையாகச் சாடினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *