கால்பந்து வீரர் ரஹீம் அப்துல்லா காலமானார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்,மார்ச் 26-

மலேசியாவின் மற்றொரு கால்பந்து ஜாம்பவான் ரஹீம் அப்துல்லா (77) காலமானார். 1991 ஆம் ஆண்டு ஒருமுறை தேசிய பயிற்சியாளராக இருந்து மறைந்த அவரை மலேசிய கால்பந்து சங்கம் ஓர் அறிக்கையில் பகிர்ந்து கொண்டது.

அவர் 1947 இல் பினாங்கில் உள்ள நிபோங் தெபாலில் பிறந்தார். அவர் ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரியும் ஆவார். மேலும் மெர்டேக்கா விழா, தெற்கு வியட்நாம் சுதந்திரக் கோப்பை மற்றும் ஜகார்த்தா ஆண்டுவிழா போட்டிகள் போன்ற பல அனைத்துலக போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளார்.

1972 ஆம் ஆண்டு ஜெர்மனியின் முனிச்சில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் அவர் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியது அவரது வாழ்க்கையின் சிறப்பம்சமாகும். கோத்தா டாமன்சாரா இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, புக்கிட் அமான் மசூதியில் பிரார்த்தனை செய்யப்படும்.

Legenda bola sepak Malaysia, Rahim Abdullah (77) meninggal dunia. Bekas jurulatih kebangsaan dan bekas pegawai polis itu pernah mewakili negara dalam Sukan Olimpik 1972. Jenazahnya disolatkan di Masjid Bukit Aman sebelum dikebumikan di Tanah Perkuburan Islam Kota Damansara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *