உணவில் புழுக்கள்!உணவகத்தை மூட உத்தரவு!

top-news
FREE WEBSITE AD

சுங்கை பட்டாணி, அக் 17:

கெடாவின் சுங்கை பட்டாணியில் உள்ள ஓர் உணவகத்தில், கடந்த செவ்வாய்கிழமை வாடிக்கையாளர் ஒருவர் உணவில் புழுக்கள் இருப்பதைக் கண்டறிந்ததை அடுத்து, மாநில சுகாதாரத் துறையால் அந்த உணவகம் மூடப்பட்டது.ஆன்லைனில் வைரலான புகார்களைச் சரிபார்க்க சுகாதார அதிகாரிகள் உணவகத்திற்குச் சென்றதாக கெடா மாநில சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் இஸ்முனி போஹாரி தெரிவித்தார். கோல முடா சுகாதார அலுவலகம் நேற்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதில், உணவு சுகாதார ஒழுங்குமுறைகள் 2009 மற்றும் உணவுச் சட்டம் 1983 இன் கீழ் அமைக்கப்பட்டுள்ள சுகாதாரத் தேவைகளுக்கு இணங்க வளாகம் செயல்படத் தவறியதைக் கண்டறிந்தது.

இந்நிலையில், உணவுச் சட்டத்தின் 11வது பிரிவின் கீழ் உணவகத்தை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது.
உரிமையாளர் சுகாதாரத் தரங்களுக்கு இணங்க சரியான நடவடிக்கைகளை எடுத்த பிறகு மீண்டும் சரிபார்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

Premis makanan di Sungai Petani diarah ditutup selepas aduan penemuan ulat dalam telur masin. Jabatan Kesihatan Kedah mengeluarkan notis kompaun.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *