“உலகின் கடைசி சாலை” என அழைக்கப்படும் நார்வேயின் E-69 நெடுஞ்சாலை!

top-news
FREE WEBSITE AD

பூமி தட்டையானது என்று சிலர் கூறுகின்றனர். அதை நிருபிக்க அவர்கள் சில விசித்திரமான கோட்பாடுகளையும் முன் வைக்கின்றனர்.ஆனால்  பூமி, வட்டமானது என்பதில் அறிவியல் நிபுணர்கள் உறுதியாக உள்ளனர். ஏனெனில் குறிப்பிட்ட முடிவு இல்லாமல், பூமி உண்மையில் ஒரு கால்பந்து மைதானம் போல அமைக்கப்பட்டிருந்தால் பூமி தட்டையானது இல்லை என்று அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பூமி உருண்டையானது என்ற உண்மை அறிவியலால் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது, இருப்பினும், பூமிக்கு தொழில்நுட்ப ரீதியாக ஒரு முடிவு உள்ளது. மேலும் அதற்கு அப்பால் நிலம் இல்லாத ஒரு சாலை உள்ளது.ஆம் அதுதான்உலகின் கடைசி சாலை...




பூமிக்கு தென் துருவம் மற்றும் வட துருவம் ஆகிய இரண்டு துருவங்கள் உள்ளன என்பது நம் அனைவரும் அறிந்தது. வட துருவம் என்பது ஆர்க்டிக் பகுதிகளுக்கு தாயகமாக உள்ளது. ஏனெனில் இந்த பகுதிகளில் எந்த நாகரிகமும் இல்லை. வட துருவத்திற்கு மிக அருகில் உள்ள பகுதிகளில் ஒன்றான நார்வே, “பூமியின் கடைசி நாடு” என்று அழைக்கப்படுகிறது.

நார்வேயில் உள்ள E-69 நெடுஞ்சாலை “உலகின் கடைசி சாலை” என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது பயணிகளை வட துருவத்திற்கு மிக அருகில் அழைத்துச் செல்கிறது. உலகின் 129 கி.மீ நீளமுள்ள வடக்கு திசையில் உள்ள நெடுஞ்சாலை, நோர்வேயின் ஃபின்மார்க் பகுதி வழியாகச் சென்று, ஒரு பனிப்பாறைக்கு அருகில் முடிகிறது. இந்த சாலையை தாண்டி வேறு நிலம் எதுவும் இல்லை. இதன் காரணமாகவே இது பூமியின் கடைசி சாலை என்று அழைக்கப்படுகிறது.




ஆர்க்டிக் நீரோ, அதிக பனிப்பாறைகளோ அல்லது நிலமோ அல்லது வீடுகளோ அல்லது நாகரிகமோ எதுவுமே இந்த பகுதியில் இருக்காது. வடக்கே செல்லும் ஓல்டர்ஃப்ஜோர்டின் நகரமான E-69 நெடுஞ்சாலை, பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது. ஆனால் ஆண்டின் பெரும்பாலான மாதங்கள் அடர்த்தியான பனி போர்வையால் மூடப்பட்டிருக்கும் தொலைதூர நெடுஞ்சாலைக்கு செல்லும் அணுகலுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

E-69 நெடுஞ்சாலையில் பல இடங்கள் உள்ளன. எனினும் அங்கு தனியாக நடப்பதும் வாகனம் ஓட்டுவதும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் இது தண்டனைக்குரிய குற்றமாகும். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நார்வே என்பது பூமியின் வடக்கு திசையில் உள்ள நாடுகளில் ஒன்றாகும், இது வட துருவத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது, இதன் காரணமாக நார்வே எப்போது குளிர்ச்சியான காலநிலையையே கொண்டிருக்கிறது. மேலும், சில தனித்துவமான இயற்கை நிகழ்வுகளும் அங்கு நடைபெறும். அதாவது, நார்வேயில் பகல்-இரவு சுழற்சி பருவம் மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்தது, கோடைகாலத்தில் நீண்ட பகல் பொழுது இருக்கும். இதனால் நார்வேயின் வடக்குப் பகுதிகளில் இரவு முழுவதும் சூரியன் தெரியும்.

வடக்கு நார்வேயில் கோடை காலத்தில் பல மாதங்களுக்கு சூரியன் மறைவதில்லை, மேலும் இரவு முழுவதும் வானத்தில் சூரியனை காணலாம். இது “துருவ நாள்”, “வெள்ளை இரவு” அல்லது “இரவில்லா இரவு” என்று அழைக்கப்படும் ஒரு இயற்கை நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *