சட்டவிரோத வட்டி கடன் முதலாளிகள் கைது! - பினாங்கு
- Sangeetha K Loganathan
- 21 Oct, 2024
அக்தோபர் 21,
பினாங்கில் சட்டவிரோதமாகக் கடன் கொடுத்து கடனைத் திரும்பப் பெற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் 4 உள்ளூர் ஆடவர்களைப் பினாங்கு காவல்துறையினர்கள் கைது செய்ததாகப் பினாங்கு மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Hamzah Ahmad தெரிவித்தார்.
கடன் பெற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் அவர்களின் உடமைகளைத் தீயிடுவது, வீடுகளில் சிவப்பு சாயம் பூசுவது, கொலை மிரட்டல்கள் விடுப்பது என அவர்கள் மீது 27 புகார்கள் நிலுவையில் உள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நால்வரும் 23 முதல் 28 வயதினர் என்றும் அவர் தெரிவித்தார். கடன்தரகர்களாக முறையாகப் பதிவு செய்யாத நிறுவனத்தின் மூலமாக அவர்கள் இம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக அவர் தெரிவித்தார்.
Polis Pulau Pinang menahan empat lelaki tempatan sindiket Ah Long yang terlibat dalam pinjaman wang tanpa lesen dan jenayah khianat rentas negeri. Mereka mengaku terlibat dalam 27 kes simbah cat dan khianat dengan api.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *