RM 4 பில்லியன் ஊழல்! முகைதீன் விசாரிக்கப்படுவாரா? SPRM விளக்கம்!
- Sangeetha K Loganathan
- 18 Oct, 2024
அக்தோபர் 18,
1 bestari Net ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் முகைதீன் யாசினும் விசாரிகப்படுவார் என லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான MACCயின் தலைமை ஆணையர் Tan Sri Azam Baki தெரிவித்தார். சுமார் 4 பில்லியன் ரிங்கிட் சம்மந்தப்பட்ட பள்ளி வகுப்புகள் மேம்பாடுகள் தொடர்பானத் திட்டத்தின் கணக்குகளில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் தற்போது அதன் மீதான விசாரணையை MACC முன்னெடுத்துள்ளது என அதன் தலைமை ஆணையர் Tan Sri Azam Baki தெரிவித்தார். இதன் விசாரணைக்காக முகைதீன் யாசினும் அவர் தலைமையில் இருந்த அமைச்சர்களையும் விசாரிக்கவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
விசாரணைக்கு அழைப்பதற்கு முன்னர் போதுமான ஆவணங்களைத் திரட்டுவதில் MACC செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். ஊழல் தொடர்பான ஆவணங்களில் முன்னாள் அதிகாரிகள் அமைச்சர்களுக்கு எதிராக இருந்தால் அவரகளைக் கட்டாயம் விசாரணைக்கு அழைப்பதாக அவர் தெரிவித்தார்.
SPRM sedang menyiasat kes 1BestariNet melibatkan penyelewengan RM 4 bilion. Ketua Pesuruhjaya SPRM, Tan Sri Azam Baki, menyatakan bahawa bekas Perdana Menteri Muhyiddin Yassin dan bekas menteri akan disiasat jika bukti mencukupi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *