பருமனாக இருக்கும் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு இல்லை! – SPRM

- Sangeetha K Loganathan
- 04 Jul, 2025
ஜுலை 4,
லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் உடல் எடை அதிகமாக இருந்தால் அவர்களுக்கானப் பதவி உயர்வு ஒத்திவைக்கப்படும் என லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki இன்று தெரிவித்தார். இந்த உத்தரவு ஜனவரி 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அடுத்த ஆண்டு பதவி உயர்வுக்கான பட்டியலில் இடம்பெற்றிருக்கும் SPRM அதிகாரிகள் ஜனவரிக்குள் உடல் பருமனைக் குறைக்கும்படியும் Tan Sri Azam Baki வலியுறுத்தினார். இது வரையில் உடல் சுகாதாரக் குறியீடான BMI குறியீட்டைப் பூர்த்தி செய்யாதவர்கள் விரைந்து 30 நாள்களுக்குள் பூர்த்தி செய்யும்படி Tan Sri Azam Baki உத்தரவிட்டார்.
இந்த உடல் தகுதி என்பது அனைத்து வகையான பாதுகாப்பு பிரிவிலும் அமல்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு நம்மைக் கண்டால் ஒரு நம்பிக்கை வரும் என்றும் Tan Sri Azam Baki தெரிவித்தார். அதே வேளையில் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் அதன் அதிகாரிகளின் உடல் சுகாதாரக் குறியீடான BMI 27 ஆக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை லஞ்ச ஊழல் தடுப்பு அதிகாரிகள் அரசு பொது மருத்துவமனையில் உடல் சுகாதாரப் பரிசோதனை மேற்கொள்வதைக் கட்டாயமாக்குவதாகவும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார்.
SPRM akan menangguhkan kenaikan pangkat pegawai yang mempunyai berat badan berlebihan mulai Januari 2026. Ketua Pesuruhjaya Tan Sri Azam Baki menegaskan BMI pegawai mesti 27 ke bawah dan saringan kesihatan berkala diwajibkan setiap tiga bulan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *