மலேசியப் பள்ளிகளில் AI தொழில்நுட்பத்தை உடனடியாக பரிசீலிக்க வேண்டும்- அன்வார்!

- Muthu Kumar
- 26 Apr, 2025
கோலாலம்பூர், ஏப்ரல்-26-
மலேசியப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பத்தை ஆரம்பத்திலிருந்தே கற்றல் கற்பித்ததில் புகுத்துமாறு, அனைத்துப் பள்ளிகளையும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக அளவில் மட்டுமே போதிக்கப்பட்டு வரும் இந்த ஏ.ஐ நுட்பம் பள்ளிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்
உலகம் போகும் வேகத்தில் நாம் பின்தங்கி விடக்கூடாது என்று குறிப்பிட்ட அவர், உடனடியாக இதனை பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அதேபோல் பகடிவதை, இன மத பேச்சுகள் போன்ற தவறான நடைமுறைகளை விட்டொழித்து, கட்டொழுங்கு மிக்க மாணவர்களை உருவாக்குவதில் பள்ளிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.அத்தகையவர்களை நல் வழி படுத்தி, அவர்களின் சிந்தனைகளை திசை மாற்ற இந்த நுட்பம் உதவியாக அமையலாம் என்று அன்வார் கூறினார்.
இதன் மூலம் பள்ளி அளவிலேயே மாணவர்கள் AI-யில் சிறந்து விளங்க முடியும்.
பேராக், தம்பூனில் வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சு ஏற்பாடு செய்திருந்த Majlis Santunan Kasih நிகழ்ச்சியில் அன்வார் இதனைத் தெரிவித்தார்.
Perdana Menteri, Datuk Seri Anwar Ibrahim menggesa semua sekolah memperkenalkan teknologi AI sejak peringkat awal pendidikan. Beliau mahu pelajar dibimbing dengan betul, meninggalkan budaya negatif, dan membina disiplin. AI dilihat mampu membantu membentuk pemikiran positif pelajar di sekolah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *