மதிப்பு மிக்க பெட்டகத்தில் துன் அப்துல்லா படாவி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்: பாக் லா மற்றும் மிஸ்டர் கிளீன் என்று செல்லமாக அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமது படாவி இன்று தேசிய மாவீரர்களின் கல்லறையான ஹீரோஸ் சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

ஐந்தாவது பிரதமரின் சவப்பெட்டி சிறப்புக் காவலர்களால் பிரார்த்தனை மண்டபத்திலிருந்து மகாம் பஹ்லாவானில் உள்ள அதன் இறுதி அடக்க இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

நாட்டின் பல மாவீரர்கள் இங்கு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டிருந்தாலும், நான்கு பேர் மட்டுமே பெட்டகத்திற்குள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

துன் டாக்டர் இஸ்மாயில் அப்துல் ரஹ்மான், துன் அப்துல் ரசாக் ஹுசைன், துன் ஹுசைன் ஓன் மற்றும் துன் அப்துல் கஃபார் பாபா ஆகியோரே அந்த நால்வர் ஆவர்.

தற்போது அந்த மதிப்பு மிக்கப் பெட்டகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார் துன் அப்துல்லா அஹமட் படாவி.

Tun Abdullah Ahmad Badawi, bekas Perdana Menteri kelima, dikebumikan di Makam Pahlawan. Beliau kini antara lima tokoh negara yang dikebumikan dalam peti khas bersama Tun Dr Ismail, Tun Razak, Tun Hussein Onn dan Tun Ghafar Baba.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *