ரோன் 95 உதவித்தொகை திட்டத்தில் இரண்டடுக்கு கட்டணமுறை-ரபிஸி ரம்லி!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, அக். 21-

ரோன் 95 உதவித்தொகை உதவித் திட்டத்தில் இரண்டடுக்கு கட்டணமுறை அமல்படுத்தப்படலாம் என்று பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பெட்ரோல் வியாபாரிகள் சங்கம் உட்பட சம்பந்தப்பட்ட பல தரப்பினருடன் அரசாங்கம் இன்னும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பதால் அந்த கட்டணமுறை தொடர்பான இதர விஷயங்கள் பின்னர் வெளியிடப் படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்பு, குடும்பத்தினருக்கு ரொக்கப் பணம் வழங்குவது குறித்து பரிசீலனை செய்தோம்.அப்போது நடைபெற்ற பேச்சில் இரண்டடுக்கு கட்டணமுறை உள்ளடக்கப்படாமல் இருந்ததால் பெட்ரோல் நிலையங்கள் அப்பேச்சுக்கு அழைக்கப்படவில்லை என்று ரபிஸி சொன்னார். சேமிப்புத்தொகையை எவ்வாறு மறுவிநியோகம் செய்வது என்பதைப் பொறுத்துதான் இத்திட்டம் அமைந்திருக்கும். நாட்டின் மக்கள்தொகையில் 85 விழுக்காட்டினருக்கு ரொக்கப்பணம் வழங்குவதா அல்லது நேரடி உதவித் தொகை வழங்குவதா என்பதுதான் அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது என்று புத்ராஜெயாவில் தேசிய தரவுகள் தினக் கொண்டாட்டத்தின்போது ரபிஸி இதனைத் தெரிவித்தார்.

ரோன் 95 வகை பெட்ரோல் மீதான இலக்கிடப்பட்ட உதவித்தொகைத் திட்டம் அடுத்தாண்டு மத்தியில் அமல்படுத்தப்படும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார். ஆயினும், 85 விழுக்காட்டு மக்களுக்கு தொடர்ந்து உதவித்தொகை கிடைத்துவரும் என்றும் அவர் உறுதியளித்தார்.கடந்த 2023ஆம் ஆண்டில் ரோன் 95 வகை பெட்ரோலுக்கு இரண்டாயிரம் கோடி வெள்ளி மானியம் வழங்கப்பட்டது என்றும் அவர் விளக்கினார்.

இரண்டடுக்கு கட்டணமுறை பற்றி மேலும் விவரித்த ரபிஸி, டீசல் எண்ணெய்க்கு தற்போது வழங்கப்பட்டுவரும் இலக்கிடப்பட்ட உதவித் திட்டத்தைவிட இது வேறுபட்டதாக இருக்கும் என்றார். மானிய விலை டீசலுக்கு நாம் ஃபிளிட் கார்டு முறையைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், மூன்று கோடி மக்களுக்கும் இந்த கார்டுகளை வெளியிட முடியாது என்றார் அவர்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *