தீபாவளிக்கு கூடுதல் விடுமுறை! – ம.இ.கா வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்:

வரும் அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு, நவம்பர் 1-ஆம் தேதியையும் கூடுதல் பொது விடுமுறையாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று மஇகா துணைத் தலைவர் டத்தோ டி.முருகையா முன்மொழிந்துள்ளார்.

கூடுதல் விடுமுறை இந்திய சமூகத்திற்கு பயனளிக்கும் என்று குறிப்பிட்ட அவர்,  பண்டிகையை கொண்டாடுபவர்களுக்கு வசதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அனைத்து மலேசியர்களும் நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையில் பங்கேற்கவும், மதிக்கவும் வாய்ப்பளிக்கும் என்று அவர் கூறினார்.மலேசியாவில் உள்ள இந்து சமூகத்தினருக்கு தீபாவளி ஒரு முக்கியமான கொண்டாட்டம், இது குடும்பங்களை சந்தித்து மகிழும் விழா, மற்ற உறவுகளுடனும் சமூக ஒற்றுமையுடன் அன்பை பரிமாறும் விழா என அவர் விளக்கினார்.

எனவே, நவம்பர் 1-ஆம் தேதியை கூடுதல் விடுமுறையாக அறிவிப்பதன் மூலம், மலேசியர்கள் ஒன்று கூடி அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் கொண்டாட அரசாங்கம் அனுமதிக்கும் என்று தாம் நம்புவதாக அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டிற்காகவும், நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையைப் பாராட்டுவதற்காகவும் இந்த கோரிக்கையை பரிசீலிக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *