புதன் : 7 மே, 2025
09 : 09 : 30 AM
முக்கிய செய்தி

கைது செய்யப்பட்ட 183 வெளிநாட்டினர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பினர்!

top-news

மார்ச் 26,

மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததற்காகக் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்த 183 வெளிநாட்டினர்களைத் தண்டனைக்குப் பின்னர் அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. KLIA 1 & KLIA 2 அனைத்துலக விமானநிலையத்தின் மூலமாகவும் பாசிர் கூடாங் கடல் வழியாகவும் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

83 மியன்மார் நாட்டினர், 40 இந்தோனேசிய நாட்டினர், 30 Bangladesh நாட்டினர், 12 பாக்கிஸ்தான் நாட்டினர், இந்தியாவைச் சேர்ந்த 10 பேர், சீனாவைச் சேர்ந்த 4 பேர், நேப்பாளத்தைச் சேர்ந்த 3 ப்பெரி, பிலிப்பின்ஸைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 183 பேர் தண்டனைக் காலத்திற்குப் பின்னர் அவர்களின் சொந்த செலவில் அவர்களின் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் மீண்டும் அவர்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிப்பட்டிருப்பதாகவும் ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

Seramai 183 warga asing yang ditahan kerana menetap secara haram di Malaysia dihantar pulang melalui KLIA dan Pasir Gudang. Mereka terdiri daripada warga Myanmar, Indonesia, Bangladesh, Pakistan, India, China, Nepal, dan Filipina, serta dilarang masuk semula ke Malaysia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *