அதுக்கும் - இதுக்கும் சம்பந்தம் இல்லை! - ரஃபிஸி விடுப்பு குறித்து சலிஹா

- Shan Siva
- 03 May, 2025
கோலாலம்பூர், மே 3: பிகேஆர் மத்தியத் தலைமைக் குழு வேட்புமனு தாக்கல்
ஒத்திவைக்கப்பட்டதற்கும், ரஃபிஸி ரம்லி பொருளாதார அமைச்சர் பதவியில்
இருந்து விடுப்பு எடுப்பதற்கும் எந்த வகையிலும் தொடர்பு இல்லை என்று பிகேஆர்
மத்தியத் தேர்தல் குழுத் தலைவர் டாக்டர் சலிஹா முஸ்தபா இன்று தெரிவித்தார்.
இந்த மாத இறுதியில் நடைபெறும் தேசிய மாநாட்டிற்கு முன்னதாக தயாரிப்புகளுக்கு அதிக நேரம் ஒதுக்குவதற்காக, வேட்புமனுக்களை தாமதப்படுத்தும் முடிவு கட்சியின் மத்தியத் தலைமையால் எடுக்கப்பட்டது என்று அவர் விளக்கினார்.
அண்மைய அரசியலமைப்புத் திருத்தங்கள் காரணமாக, பூர்த்தி செய்ய வேண்டிய பல புதிய தேவைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, பிரதிநிதிகள் பட்டியல் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
அதற்கான செயல்பாடுகளை முடிக்க அதிக நேரம் தேவைப்படுகிறது எனவே ரஃபிஸிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஏற்கனவே கூறியது போல், விடுப்பு எடுப்பது இயல்பானது என்று அவர் இன்று ஒரு நிகழ்வுக்குப் பிறகு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *