கோலாலம்பூர், மே 3: அம்னோவுடன்
பெர்சாத்து ஒத்துழைக்க விரும்புவது குறித்து முறையான விவாதங்களை பெர்சாத்து
அம்னோவுடன் தொடங்க வேண்டும் என்று கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் அஹ்மத் மஸ்லான்
கேட்டுக்கொண்டுள்ளார்.
பெர்சத்து துணைத்
தலைவர் ஹம்சா ஜைனுடினின் இரு கட்சிகளும் இணைந்து பணியாற்றுவதற்கான சமீபத்திய
பரிந்துரை குறித்து கருத்துரைக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், அம்னோவின் உயர்மட்டத் தலைமைக்குள் எந்த விவாதமும் இல்லை என்று அஹ்மத்
கூறினார்.
பெர்சத்து
அம்னோவுடன் ஒத்துழைக்க விரும்பினால் அல்லது எங்களுடன் மீண்டும் இணைய விரும்பினால், அவர்கள் தங்கள் நோக்கத்தைத் தெரிவிக்கும் முறையான கடிதத்தை சமர்ப்பிக்க
வேண்டும் என்று ஜொகூர் பெனூட்டில் இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
பிறகு அவர் இதனைத் தெரிவித்ததாக பெரித்தா ஹரியான் மேற்கோள் காட்டிதுள்ளது.
ஊடகங்களில் அதைத்
திரும்பத் திரும்பக் கொண்டுவருவதை நிறுத்துங்கள். முறையான கோரிக்கை இல்லையென்றால், அதை எப்படி அதிகாரப்பூர்வமாக விவாதிக்க முடியும்? என்று அவர் வினவினார்.
கடந்த
வியாழக்கிழமை ஒரு நேர்காணலில் பெர்சாத்து அம்னோவுடன் இணைந்து பணியாற்றத்
திறந்திருப்பதாக ஹம்சா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!