அம்னோவை கலைத்துவிட்டு பெர்சாத்துவில் சேருங்களேன்! - முகைதீன்

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா: அம்னோவுடன் ஒத்துழைப்பது தொடர்பான அண்மைய கருத்துகள், அல்லது எந்தவொரு பரிந்துரையும் அதிகாரப்பூர்வமானது அல்ல என்றும், அது கட்சி உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் என்றும் பெர்சத்து தலைவர் முகைதீன் யாசின் தெளிவுபடுத்தியுள்ளார்.

அரசியல் ஒத்துழைப்பு குறித்த முடிவு, மூலோபாய காரணிகள் மற்றும் கட்சியின் முக்கிய கொள்கைகளின் சிக்கலான மதிப்பீட்டை உள்ளடக்கியது என்று அவர் கூறியதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.

சிக்கலான பிரச்சினைகள் உள்ளன.  மேலும் இந்த ஒத்துழைப்பு விஷயம் அது போல் தோன்றும் அளவுக்கு எளிதானது அல்ல என்று அவர் இன்று நெகிரி செம்பிலானில் உள்ள ஜெம்போலில் நடந்த பெர்சாத்து ஹரி ராயா ஐடில்ஃபிட்ரி நிகழ்வில் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

நான் அப்படி ஒரு அறிக்கையை வெளியிட விரும்பவில்லை. கட்சியின் அரசியல் பீரோ மற்றும் உச்ச தலைமைத்துவ கவுன்சில் மட்டத்தில் அதைப் பற்றி விவாதிப்போம் என்று அவர் கூறினார்.

அம்னோவுடன் ஒத்துழைப்பது குறித்து பெர்சாத்துவில் உள்ள எனது சகாக்கள் ஏதேனும் கருத்துக்களை வெளிப்படுத்தினால், அவை அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள், கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்று அவர் விளக்கினார்.

கடந்த வியாழக்கிழமை, பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவர் ஹம்சா ஜைனுடின், அம்னோவுடன் இணைந்து பணியாற்ற கட்சி திறந்திருப்பதாக ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஆயர் கூனிங் இடைத்தேர்தலின் முடிவுகளைச் சுட்டிக்காட்டி ஹம்சா இந்த நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.  குறைந்த வாக்குப்பதிவு இருந்தபோதிலும் அம்னோ அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது என்றார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, அம்னோ படைவீரர் சங்கச் செயலாளர் முஸ்தபா யாகூப் பெர்சாத்துவைக் கலைத்துவிட்டு அம்னோவுக்குத் திரும்புமாறு அழைப்பு விடுத்தார்.

இருப்பினும், முஹைதீன் அத்தகைய யோசனையை நிராகரித்தார். பெர்சத்து தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது என்றும்,  குறிப்பாக டிஏபியுடன் இணைந்து பணியாற்றுவதில் விருப்பம் இல்லை என்றும் அவர் கூறினார்

மேலும், எனது கேள்வி என்னவென்றால், அம்னோவைக் கலைத்துவிட்டு ஏன் அவர்கள் பெர்சாத்துவில் சேரக்கூடாது? என்று அவர் கேள்வி எழுப்பினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *