BWF தரவரிசை – Lee Zii Jia உலகின் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 10: இன்று வெளியிடப்பட்ட பேட்மிண்டன் உலக சம்மேளனத்தின் (BWF) தரவரிசையில் மலேசியாவின் முன்னணி ஒற்றையர் வீரர் Lee Zii Jia ஒரு படி ஏறி உலகின் 3வது இடத்தைப் பிடித்தார்.

சீனாவின் Shi Yuqi உலகின் நம்பர் 1 வீரராகவும், இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியனான டென்மார்க்கின் Viktor Axelsen  இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

மற்றொரு தேசிய ஆடவர் ஒற்றையர் வீரரான Ng Tze Yong, இரண்டு முதுகு அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு பிப்ரவரி முதல் எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதனை அடுத்து  மூன்று இடங்கள் சரிந்து 25 வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் மலேசியா வலுவாக உள்ளது, உலகின் முதல் 20 இடங்களில் நான்கு தேசிய ஜோடிகள் இடம் பெற்றுள்ளன.

இருப்பினும், நாட்டின் முன்னணி ஜோடியான Aaron Chia-Soh Wooi Yik 4,150 புள்ளிகளை இழந்து உலகின் மூன்றாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

 பெண்கள் இரட்டையர் பிரிவில், Pearly Tan-M Thinaah உலக அளவில் எட்டாவது இடத்தில் நீடிக்க, கலப்பு இரட்டையர் ஜோடியான Chen Tang Jie-Toh Ee Wei ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

 நாட்டின் முன்னணி மகளிர் ஒற்றையர் வீராங்கனையான Goh Jin Wei இரண்டு இடங்கள் சரிந்து உலகின் 33வது இடத்திற்கு தள்ளப்பட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *