கெடாவில் அதிகரிக்கும் வெள்ளம்... ஆபத்தான நிலையில் ஆறுகள்!
- Shan Siva
- 18 Sep, 2024
அலோர் ஸ்டார், செப் 18: கெடா மாநிலத்தில் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, 388 குடும்பங்களைச் சேர்ந்த 2,194 பேர் தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 11
தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 8 மணி
நிலவரப்படி இந்தப் புள்ளிவிவரங்கள் துல்லியமானவை என்று கெடா நலத்துறை இயக்குநர்
டத்தோ சுல்கைரி ஜைனோல் அபிடின் தெரிவித்தார்.
நேற்று இரவு 11
மணியளவில் 341 குடும்பங்களைச் சேர்ந்த 2,039 பேருடன் ஒப்பிடும்போது
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.
மாநிலம்
முழுவதும் உள்ள பல ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், மழை தொடர்ந்தால், சிக், யான் மற்றும் பாலிங் ஆகிய
இடங்களில் புதிய நிவாரண மையங்கள் திறக்கப்படும் என்று சுல்கைரி தெரிவித்தார்
இதற்கிடையில், Public Infobanjir இணையதளத்தின்படி, மாநிலம் முழுவதும் உள்ள
எட்டு ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டி இன்று காலை 9 மணி நிலவரப்படி
தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குபாங் பாசுவில்
மூன்று ஆறுகளும், கோத்தா ஸ்டாரில் இரண்டு ஆறுகளும், யான், பாடாங் தெராப் மற்றும் பெந்தாங்கில் ஆறுகள் அபாயக்
கட்டத்தைத் தாண்டியுள்ளன.
மாநிலத்தில் உள்ள
12 ஆறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *