RON 95 பெட்ரோலுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியம் அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்: RON 95 பெட்ரோலுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியம் அடுத்த ஆண்டு மத்தியில் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

மக்களின் நல்வாழ்வை எப்பொழுதும் பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு மிகவும் தேவைப்படும் இடங்களில் நிதி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் அடிப்படையில் இது அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.

85 சதவீத மக்களின் நலனுக்காக 12 பில்லியன் ரிங்கிட் மானியங்களைத் தொடர்ந்து வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. இவை மிகப் பணக்காரர்கள் அல்லது வெளிநாட்டினருக்காக அல்ல என்று குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் RON 95 பெட்ரோலுக்கு இலக்கு மானியத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் சேமிப்பு கல்வி வசதிகள், சுகாதாரம் மற்றும் பொது போக்குவரத்து உட்பட மக்களின் நல்வாழ்வுக்காக பயன்படுத்தப்படும் என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *