புதன் : 7 மே, 2025
9 : 53 : 54 PM
முக்கிய செய்தி

வளர்ப்பு மகளை ஆபாச வீடியோ எடுத்த தந்தைக்கு இன்னும் கடுமையான தண்டனை வேண்டும்! – அமைச்சர் நான்சி ஷுக்ரி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 21: தனது 15 வயது வளர்ப்பு மகளை நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்திருந்ததற்காக RM6,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்ட தந்தைக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்க வேண்டும், இந்த தண்டனை போதாது என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூகநல மேம்பாட்டுத்துறை அமைச்சர் நான்சி ஷுக்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த தண்டனையை எதிர்த்து சம்பந்தப்பட்ட தரப்பினர் மேல்முறையீடு செய்வார்கள் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.

அவரது கொடூரமான செயல்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும். குறிப்பாக ஒரு மாற்றாந்தந்தையாக, அவர் தனது குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டுமே தவிர,  இது மாதிரி நடந்து கொள்ளக்கூடாது என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

கடுமையான தண்டனைதான், பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவதோடு மட்டுமல்லாமல், இதே போன்ற குற்றங்களைச் செய்வதிலிருந்து மற்றவர்களையும் தடுக்கும் என்று நான்சி கூறினார்.

எந்த வகையிலும் குழந்தை சுரண்டல் அல்லது பாலியல் துன்புறுத்தலைப் பொறுத்துக்கொள்ளக்கூடாது என்று அவர் வலுயுறுத்தினார்.

56 வயதான துப்புரவுத் தொழிலாளி புதன்கிழமை மூவர் அமர்வு நீதிமன்றத்தில் தனது வளர்ப்பு மகள் தொடர்பான ஆபாசப் படங்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். குறிப்பாக 18 வீடியோ பதிவுகள் அவர் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது!

Menteri Pembangunan Wanita, Keluarga dan Masyarakat, Nancy Shukri, mendesak hukuman lebih berat terhadap bapa angkat yang didenda RM6,000 kerana menyimpan video lucah anak angkatnya. Beliau menegaskan hukuman tegas diperlukan untuk memberi keadilan kepada mangsa dan mencegah kes seumpama ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *