சொத்துடமை மேம்பாட்டு மசோதாவை அரசு அறிமுகப்படுத்த திட்டம்!
- Shan Siva
- 15 May, 2024
வளர்ச்சியடைந்து வரும்
சொத்துடைமைத் தொழிலின் ஒழுங்குமுறையை மேம்படுத்த, உண்மையான சொத்துடைமை மேம்பாட்டு மசோதாவை அறிமுகப்படுத்த அரசாங்கம்
திட்டமிட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சித்துறை Nga Kor
Ming தெரிவித்துள்ளார்.
தற்போதைய வீட்டுவசதி மேம்பாட்டு
சட்டம் 1966
பல்வகைப்படுத்தப்பட்ட சொத்துத் துறைக்கு போதுமானதாக இல்லை என்று அவர்
கூறினார். இச்சட்டம்
குடியிருப்பு சொத்துக்களை மட்டுமே ஒழுங்குபடுத்துகிறது.
தொழில்துறை மேலும் மேலும்
பன்முகத்தன்மை வாய்ந்ததாக மாறியுள்ளது. சந்தையில் சில்லறை, வணிக மற்றும் மருத்துவப் பிரிவுகளை அதிகம் பார்க்க
முடிகிறது என்று குறிப்பிட்ட அவர்,
இந்த மசோதா இன்னும் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட பங்குதாரர்களை தனது அமைச்சு தொடர்ந்து ஈடுபடுத்தும் என்றும்
கூறினார். 2025ல் இம்மசோதா தாக்கல்
செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு எங்கள் முக்கிய
இலக்கு,
நகர்ப்புற
மறுவடிவமைப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதுதான் என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *