விரதம் இருப்பதன் மகிமை!

top-news
FREE WEBSITE AD

இறைவனோடு இரண்டற கலக்க வேண்டும் என்பதையே எல்லா வழிபாடுகளும் நமக்கு உணர்த்துகின்றன என்றாலும் இம்மையில் எல்லாவித சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் இறைவனிடம் வழிபட தவறுவதில்லை.

இறைவனிடம் எல்லாவற்றையும் உரிமையோடு கேட்ட ஆதிகாலத்து மக்களின் பழக்கம், நாளடைவில் பல்வேறு வடிவங்களாக மாறியது.அதில் ஒன்றுதான் எதுவும் சாப்பிடாமல், பட்டினி இருந்து, உண்ணாவிரதம் மேற்கொள்வது.ஆரோக்கிய வாழ்க்கைக்கு விரதம் அவசியமானது என்ற அறிவியல் உண்மை உறுதிபடுத்தப்பட்ட பிறகு அது ஆன்மீகத்தில் ஒரு அங்கமாக ஐக்கியமாகி விட்டது.

இன்று உண்ணா நோன்பு இருப்பது என்பது உலகில் எல்லா மதத்திலும் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது.குறிப்பாக இந்து மதத்தில் விரதம் இருப்பது அதிகமாக உள்ளது. நாள் விரதம், வார விரதம், மாத விரதம் என்று இந்து மதத்தில் ஒவ்வொரு பண்டிகைக்கும் விரதம் உள்ளது.

இந்த விரதங்கள் ஒவ்வொன்றுக்கும் எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பது வரையறுத்து கூறப்பட்டுள்ளது.இதன் காரணமாக உண்ணாவிரதம் இருந்து இறைவழிபாடு செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது.குறிப்பாக ஆண்களை விட பெண்களே அதிக அளவில் விரதம் இருப்பதை தவறாமல் கடைபிடிக்கிறார்கள்.

விரதம் இருந்து இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் போது நிச்சயமாக தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்று நம்புகிறார்கள்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *