கத்தாரில் UKM - பிரதமர் பெருமிதம்!
- Shan Siva
- 15 May, 2024
கத்தாரில் யுகேஎம் பல்கலைக்கழக வளாகம் திறக்கப்படுவதன் மூலம் தேசிய உயர்கல்வியை உலக அரங்கில் உயர்த்த முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
இந்தப் பல்கலைக்கழகம் மலேசிய பொதுக் கல்வி நிறுவனமாக தேசிய மொழியை முதன்மையாகப் பயிற்றுவிக்கும் ஊடகமாகத் தொடங்கியதால் இது மிகவும் குறிப்பிடத்தக்கது என்று அவர் கூறினார்.
தேசிய மொழியைப் பயிற்றுவிக்கும் ஊடகமாக ஒரு பொது பல்கலைக்கழகத்தை நிறுவ வலியுறுத்தும் குறிப்பாணையில் கையெழுத்திட்ட நபர்களில் ஒருவராக, இந்தப் புகழ்பெற்ற நாளில் UKM ஊழியர்களுடன் இருப்பதில் தாம் பெருமைப்படுவதாக தமது முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். அன்வார் கத்தாரின் தோஹாவில் இந்த வளாகத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
UKM இன் முன்னோடி நடவடிக்கை மற்ற மலேசிய பொதுப் பல்கலைக்கழகங்களும் இதைப் பின்பற்ற வழி வகுக்கும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காண UKM தலைமை மற்றும் ஊழியர்களுடன் இருக்கும் வாய்ப்பை வழங்கியமைக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
UKM துணைவேந்தர் முகமட் எக்வான் டோரிமனுக்கும் அவர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *