அன்வாரின் வெளிநாட்டுப் பயணத்தை அரசியலாக்க வேண்டாம்! எதிர்கட்சிக்கு RAFIZI வலியுறுத்து!

- Sangeetha K Loganathan
- 04 Jul, 2025
ஜூலை 4,
பிரதமர் Datuk Seri Anwar Ibrahim மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணத்தை அரசியலாக்கி விமர்சிக்க வேண்டாம் என எதிர்கட்சிகளுக்கு முன்னாள் பொருளாதார அமைச்சர் Datuk Seri Rafizi Ramli வலியுறுத்தினார். தற்போது மலேசியா இந்தோனேசியாவுடன் மேற்கொண்டிருக்கும் எண்ணெய் உற்பத்தி கூட்டு வளங்கள் பகிர்வு என்பது அண்டை நாடுகளுடன் நாம் மேற்கொள்ளும் இரு வழி தொடர்பு என்பதை Datuk Seri Rafizi Ramli சுட்டிக்காட்டினார். நமக்கு முதலீடுகள் வேண்டும் என்றால் நாமும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இரு நடுகளின் உடன்படிக்கையின் வாயிலாக மலேசியா இந்தோனேசியா Ambalat திட்டம் செயல்படுவதாக முன்னாள் பொருளாதார அமைச்சர் Datuk Seri Rafizi Ramli சுட்டிக்காட்டினார்.
கடந்த 1970 ஆம் ஆண்டில் மலேசியா தாய்லாந்து MTJDA ஒப்பந்தத்தால் இன்று வரையிலும் கிளாந்தான் லாபம் பெற்று வருவதை எதிர்கட்சியினர் மறந்து விட வேண்டாம் என முன்னாள் பொருளாதார அமைச்சர் Datuk Seri Rafizi Ramli பெரிக்காத்தான் தலைவர் Tan Sri Muhyiddin Yassinக்கு நினைவூட்டினார். முன்னதாக பிரதமர் அன்வார் மலேசியா இந்தோனேசியா எல்லை பகுதிகளில் உள்ள எண்ணெய் வளங்களை இந்தோனேசியாவுடன் பகிரும் ஒப்பந்தத்தில் கொயெழுத்திட்டதில் Tan Sri Muhyiddin Yassin கடுமையாக விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Rafizi Ramli menegaskan pembangkang tidak harus mempolitikkan lawatan luar negara PM Anwar. Beliau mengingatkan kerjasama perkongsian sumber minyak Malaysia-Indonesia penting seperti MTJDA Malaysia-Thailand yang bermanfaat sejak 1970-an, dan perjanjian itu demi pelaburan masa depan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *