4 வயதில் இரட்டை உலகச் சாதனைகள்! – கார்த்திகேய தேசிகன்!

top-news
FREE WEBSITE AD

சிலாங்கூரைச் சேர்ந்த தேசிகன் மன்வீரன் முனைவர் கனகேஸ்வரி சொக்கலிங்கம் ஆகியோரின் மகனான கார்த்திகேய தேசிகன் எண் கணக்கியல் துறையில் தனது 4 வயதில் இரண்டு உலகச் சாதனைகளைப் படைத்துள்ளார்.

கணிதத்தின் googol கணக்கியல் முறையை நன்கு கற்று, தனது நினைவாற்றலுடன் பத்துக்குச் சுழியம், நூற்றுக்கு பத்து எனும் கணக்கியலை முழுமையாக ஒப்பித்து இளம் கணித மேதை எனும் கிராண்ட் மாஸ்தர் எனும் அங்கீகாரத்தை ஆசியச் சாதனையாளர் ஆணையம் வழங்கி கெளரவித்துள்ளது.

இதனை அடுத்து 101 எண்களின் அடையாளத்துடன் பெயரையும் அடையாளப்படுத்தியும் சாதனைப் படைத்துள்ளார் கார்த்திகேய தேசிகன். ஆசியாவிலேயே கணிதத் துறையில் 4 வயதில் இச்சாதனையைப் புரிந்துள்ள இவருக்கு இளம் மேதை என உலகச் சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதித்துள்ளார்.

கணிதத்தில் சிக்கலான எண்களைத் திறம்பட கையாண்டதால் அவருக்கான இந்த ஆசிய சாதனையாளர் விருதும், உலகச் சாதனையாளர் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகேய தேசிகனின் தந்தையான தேசிகன் மன்வீரன் தனியார் நிறுவனத்தில் மேலாளராகவும் அவரின் தாயார் முனைவர் கனகேஸ்வரி சொக்கலிங்கம் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியலாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.

கார்த்திகேய தேசிகனின் திறமை அவர் 20 மாதக் குழந்தையாக இருந்த போதே அவர் தனது சாதனையை மலேசியச் சாதனை புத்தகத்தில் பதிவு செய்துள்ளதாக அவரின் பெற்றோர்கள் தெரிவித்தனர். அங்கிருந்தே அவரின் திறமைக்கான தளங்களைத் தடையின்றி அமைத்து கொடுக்கும் பொறுப்பை அவர்கள் கொண்டிருப்பதாகவும், அவருக்கான நிலையான அங்கீகாரத்துடன் அவர் தொடர்ந்து சாதனைகளைப் புரிய எல்லா வகையிலும் அவர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என கார்த்திகேய தேசிகனின் பெற்றோர்களான தேசிகன் மன்வீரன் முனைவர் கனகேஸ்வரி சொக்கலிங்கம் இணையர் நம்பிக்கை அளித்தனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *