சுங்கை கிச்சில் தோட்ட வீடமைப்புத் திட்டம்; ஆட்சிக்குழு உறுப்பினருடன் விவாதிக்கப்படும்!
- Shan Siva
- 15 May, 2024
பினாங்கு, தென் செபராங் பிறை, சுங்கை கிச்சில் தோட்டத்தைச் சேர்ந்த 23 இந்தியக் குடும்பங்களுக்கான வீடமைப்பு திட்டம் குறித்து பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், பிறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ
சுந்தரராஜூ கவனத்திற்குக் கொண்டு செல்லப்படுமென நிபோங் தெபால் நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன் தெரிவித்தார்.
தனியார் நில உரிமையாளரிடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட அந்த 5 ஏக்கர் நிலத்தில் பாதிக்கப்பட்ட 23 குடும்பங்களுக்கு, அதே இடத்தில வீடுகளை நிர்மாணித்துத் தர பினாங்கு மாநில அரசாங்கம் முடிவெடுத்தது. அதன் பிறகு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டியுள்ளதாக தியாகராஜ் சங்கரநாராயணன் கூறினார்.
23 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கு அஸ்பென் ( Aspen Group) என்ற தனியார் மேம்பாட்டு நிறுவனம் நியமிக்கப்பட்டிருக்கும் வேளையில், இனியும் கால தாமதம் ஏற்படாமலிருக்க உடனடி
நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியமென, இத்தோட்ட வீடமைப்பு சிறப்பு நடவடிக்கை குழுவினரைச் சந்தித்த பிறகு, கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரியுமான தியாகராஜ் சங்கரநாராயணன் இதனைத் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *