தாலி என்ற பெயரின் தகவலும்,தாளை பனை மரம் எனும் தகவலும்!

top-news
FREE WEBSITE AD

தாளை பனை மரத்தில் கட்டப்பட்டதால் இது தாலி என பெயர் பெற்றது.இதுதான் தாலி என சொல்லப்பட்டு வந்தது. தாளை பனைமர ஓலைகள் என்றும் மங்காது.எனவேதான் ஓலை சுவடிகள் எல்லாம் தாளை பனைமரத்து ஓலையில் எழுதப்பட்டது.


அன்று எழுதப்பட்ட ஓலைசுவடிகள் தான் இன்றும் அழியாமல் இருக்கிறது.இந்த தாளை பனை மரம் தை மாதத்தில் மிக செழிப்பாக வளர்ந்து இருக்கும்.தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மட்டும் இது காணப்படுகிறது.சாதாரண பனை ஓலையில் எழுதினால் நாள் அடைவில் இது மங்கி போகும்.ஆனால் தாளை பனை ஓலையில் எழுதினால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்னும் நமக்கு பயன்படும் விதத்தில் தான் இருக்கின்றது.

கையில் அணிவது வளையல், கைவிரலில் அணிவது மோதிரம், காலில் அணிவது கொலுசு, கால் விரலில் அணிவது மெட்டி என்று கூறுகிறோம்.அதே போல் பெண்களின் கழுத்தில் கட்டப்படுவதால் தாலி என பெயர் பெறுகிறது.

இன்றுதான் தங்கம் + மஞ்சள் சரடுடன் பெண்கள் கழுத்தில் கட்டப்படுகிறது.தங்கம் கண்டு பிடிப்பதற்கு முன்பாக மங்கையர் கழுத்தில் மஞ்சள் கிழங்கு + மஞ்சள் பூசப்பட்ட நூலாலும் தாலியாக கட்டப்பட்டது.அதற்கும் முன்பாக அதாவது மஞ்சள் கிழங்கிற்கு முன்பாக பண்டைய காலத்தில் தாளை பனைமரம் ஓலையைதான் தாலியாக கட்டினார்கள்.

அதாவது ஒரு பக்கத்தில் மணப்பெண்ணும், மணப்பெண்ணின் வீட்டாரும் உறவினர்களும், மறுபக்கத்தில் மணமகனும் மணமகன் வீட்டாரும், உறவினர்களும் மற்றும் ஊர் பெரியோர்களும், ஊர்காரர்களும் முன்னிலையில் தாளைபனை மரம் ஓலையில் இன்னாருடைய (தந்தை தாய் பெயர்) மகளை (மணமகள் பெயர்) இன்னாருடைய (மணமகன் தந்தை தாய் பெயர்) மகனுக்கு (மணமகன் பெயர்) ஊர் பெரியோர் முன்னிலையில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது என எழுதுவார்கள்.

அந்த ஓலையை மடித்து தாளை பனைமர ஓலையின் நாரை கிழித்து கட்டி மணமகன் கையில் தரப்படும்.மணமகன் அங்கு கூடி இருப்போர் முன்பாக மணமகள் கழுத்தில் கட்டுவார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *