தங்கம் மட்டும் வெல்லவில்லை! இந்தியர்கள் மனதையும் வென்ற பாக் வீரர் அர்ஷத் நதீம்!

top-news
FREE WEBSITE AD

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தானின் ஹர்ஷத் நதீம் தங்கப் பதக்கமும், இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கமும் வென்றனர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின் பதக்கம் அணிவித்த போது இருவரும் ஒருவர் கை கொடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படத்தை அர்ஷத் நதீம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இருவரும் தங்கள் தலைகளை ஒன்றாக இணைத்து நிற்பது போலவும், கைகளை குலுக்கிக் கொண்டிருப்பது போலவும் அந்த புகைப்படம் இருக்கிறது.

அந்த புகைப்படத்தின் கீழ், "நாங்கள் எப்போதுமே இயல்பான நண்பர்கள்" என பதிவிட்டு பாகிஸ்தானின் தேசியக்கொடி மற்றும் இந்தியாவின் தேசிய கொடியை பதிவிட்டு இடையே இதய சின்னத்தை பதித்துள்ளார். அதன் மூலம், பாகிஸ்தான் மற்றும் இந்தியா நட்புடன் இருப்பதை அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த பதிவை இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் ஒரு சேர பாராட்டி வருகின்றனர். இதற்கு முன்பே அர்ஷத் நதீம் மற்றும் நீரஜ் சோப்ரா பல்வேறு ஈட்டி எறிதல் தொடர்களில் ஒன்றாக பங்கேற்றுள்ளனர். அதன் மூலம் இருவருக்கும் இடையே இயல்பான நட்பு உள்ளது. ஒரு முறை 2022 உலக சாம்பியன்ஷிப் தொடரில் நீரஜ் சோப்ரா தங்கமும், அர்ஷத் நதீம் வெள்ளியும் வென்றனர்.

அப்போது அர்ஷத் நதீமிடம் பாகிஸ்தானின் தேசியக்கொடி இல்லை. அதனால் பதக்கம் அணிவித்த பின், அவர் புகைப்படத்திற்காக நிற்க வேண்டி வந்த போது பாகிஸ்தான் கொடியை தேடி அங்குமிங்கும் அலைந்தார். அப்போது அவரை அழைத்த நீரஜ் சோப்ரா இந்திய தேசிய கொடியுடன் அவரை தனது அருகில் நிற்க வைத்துக் கொண்டார். அந்த புகைப்படமும் அப்போது இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களின் இதயத்தை வென்றது.

அதே போன்ற ஒரு விஷயத்தை தற்போது அர்ஷத் நதீம் செய்துள்ளார். கிரிக்கெட் போன்ற மற்ற விளையாட்டுகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஆக்ரோஷமாக மோதிக் கொள்ளும் நிலையில், இந்த இரு நாடுகளையும் அன்பால் ஒன்றிணைக்கும் வகையில் நீரஜ் சோப்ரா மற்றும் அர்ஷத் நதீம் நடந்து கொண்டது நெகிழ வைக்கும் வகையில் இருந்தது.

2024 ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் வீசி ஒலிம்பிக் வரலாற்றில் சாதனை படைத்தார். நீரஜ் சோப்ரா தான் வீசிய ஆறு வாய்ப்புகளில் ஒரு முறை மட்டுமே ஈட்டியை சரியாக வீசினார். மற்ற ஐந்து முறையும் அவர் தவறு செய்தார். எனினும், அந்த ஒரு முயற்சியில் அவர் 89.54 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *