புதன் : 7 மே, 2025
03 : 55 : 55 AM
முக்கிய செய்தி

கொள்ளைக் கும்பலைச் சுட்டுக் கொன்ற காவல்துறை! – SEPANG

top-news

மார்ச் 14,

இன்று நள்ளிரவு கொள்ளைக் கும்பலைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாகப் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை உதவி இயக்குநர் Datuk Fadil Marsus தெரிவித்தார். சுட்டுக்கொலை செய்யப்பட்டவர்கள் வெளிநாட்டினர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற கும்பல் வீட்டின் அலாரம் ஒலித்ததால் தப்பிக்க முயன்ற நிலையில் வீட்டின் உரிமையாளர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து சம்மந்தப்பட்ட கொள்ளைக் கும்பலை விரட்டிய காவல்துறையினர் செப்பாங்கில் உள்ள காட்டுப்பகுதியில் நுழைந்து காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர்கள் கொல்லப்பட்டதாகவும் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை உதவி இயக்குநர் Datuk Fadil Marsus விளக்கமளித்தார்.

தப்பி ஓடிய கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 5 பேரில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் மேலும் இருவரை காவல்துறையினர் தேடி வருவதாகவும் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் 35 முதல் 40 வயதுள்ள வெளிநாட்டினர் என்றும் தெரிய வந்துள்ளது.

Polis menembak mati tiga penjenayah warga asing di kawasan hutan Desa Vista, Sepang, selepas mereka menyerang polis dengan parang. Suspek terlibat dalam 17 kes pecah rumah sejak tahun lalu dengan kerugian RM1 juta. Dua lagi suspek masih diburu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *