இறந்தவங்களை சூப் வெச்சு குடிக்கும் விநோதம் ஆப்பிரிக்க பழங்குடி மக்கள்!

- Muthu Kumar
- 06 Jan, 2025
இறந்தவர்களை சூப் வைத்து குடிக்கும் மக்களை பற்றி தெரியுமா? ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களை சாப்பிடும் எண்டோகானிபலிசம் பற்றி தெரியுமா?இந்த காலத்தில் இப்படியும் விநோத மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நாகரீக வாழ்க்கைக்குள் நுழையாமல், தங்களது பல நூறு வருட மரபு, பாரம்பரியம், கலாச்சாரத்தையே இன்றுவரை நம்பிக்கையுடன் கடைப்பிடித்து வருபவர்கள் ஆப்பிரிக்க பழங்குடி மக்கள். வெளிஉலக தொடர்பில்லாமல், தங்களுக்குரிய சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வருபவர்கள். இவர்களின் திருமண நடைமுறையே வித்தியாசமானது.
நமீபியா போன்ற நாடுகளில், சொந்த மனைவியையே சுற்றுலா பயணிகளுக்கு, விருந்தாக்கிவிடுவார்களாம். எத்தியோப்பியா பழங்குடி மக்களில், பெரிய தொப்பை வைத்துள்ள ஆண் மகனுக்கு பெண் தருவார்கள். "கேல்" என்ற திருவிழாவில், பசுவின் ரத்தத்தை குடிப்பார்களாம். இதற்காகவே, ஒவ்வொரு பசுவிலிருந்தும் சிறு ஓட்டையிட்டு, ரத்தம் எடுக்கப்படும்.. இந்த துளையை களிமண் கொண்டு அடைத்துவிடுவார்களாம்.
மலாவி பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடி மக்களோ, மனிதனின் சடலத்தை சாப்பிடுவார்களாம். இறந்தவரின் சடலத்தை நெருப்பில் வாட்டி சுட்டு சாப்பிடுவார்களாம். அப்போது சடலத்தை சுற்றி உட்கார்ந்து கொண்டு, பாடிக்கொண்டே அழுவார்களாம்.. அழுதுகொண்டே சாப்பிடுவார்களாம். பிரேசில், வெனிசுலா போன்ற இடங்களில் வாழும் யனோமாமி பழங்குடியினரும், இறந்தவர்களை சாப்பிடுகிறார்களாம். இந்த சடங்கினை அறிவியல் ரீதியாக எண்டோகானிபலிசம் (Endocannibalism) என்கிறார்கள்.
அதாவது, ஒரு இனத்தை சேர்ந்தவர்கள் அதே இனத்தவர்களை சாப்பிடுவதற்கு கானிபலிசம் என்று பெயர்.. ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களை சாப்பிடுவதற்கு எண்டோகானிபலிசம் என்று பெயர்.
யனோமாமி பழங்குடியினரின் வழக்கப்படி, மரணத்திற்கு பிறகு ஒருவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுமானால், அவர்களது உடல் எரிக்கப்பட்டு, இறந்தவர்களின் உறவினர்கள் அதனை சாப்பிடவேண்டும் என்பது வழக்கமாம்.
யாராவது இறந்துவிட்டால், அவர்களது சொந்தக்காரர்கள் எல்லாம் கூடி, அழுது பாட்டு பாடி துக்கத்தை வெளிப்படுத்துவார்கள். அதற்கு பிறகு இறந்தவர்களின் முகங்களில் லேசாக மண்ணை தேய்த்து, பிணங்களை எரித்துவிடுவார்கள்.
அடுத்ததாக, எரிந்த உடல்களின் மிச்சத்திலுள்ள சாம்பல், எலும்புகளை வைத்து, வாழைப்பழத்துடன் சேர்த்து, சூப் போல சமைத்து குடிப்பார்கள். இப்படி சூப் வைத்து குடித்துவிட்டால், நெருக்கமானவர்கள் தங்களை விட்டு பிரியவில்லை, தங்களுடனேயே இருப்பார்கள் என்று நம்புகிறார்கள். இயற்கை மரணம் என்றால் அனைவருமே அந்த சூப்பை குடிக்க வேண்டும். ஒருவேளை கொலை செய்யப்பட்டுவிட்டால், பெண்கள் மட்டும் தான் அந்த பிணங்களை சாப்பிடவேண்டுமாம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *