அம்னோ இன்னும் பிடிவாதமாக இருந்தால் MCA வெளியேறும்!

top-news
FREE WEBSITE AD




பெர்சாத்து மற்றும் பாஸ் கட்சிகளின்  தலைவர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் டிஏபிக்கு போட்டியைக்  கொடுப்பதற்காக எம்சிஏவை பெரிகாத்தான் நேசனலில் இணைப்பதற்குத் தயாராக உள்ளனர்.


இரண்டு கட்சிகளும் ஒரே அணியில் இருந்தால், மலாய்க்காரர் அல்லாத இடங்களை, குறிப்பாக  டிஏபியிடம் இருந்து சீனர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளை கெராக்கானும் எம்சிஏவும் கைப்பற்ற முடியும் என்று பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் ரசாலி இட்ரிஸ் தெரிவித்துள்ளார்.


எம்சிஏ, பாரிசான் நேஷனலை விட்டு வெளியேற நினைத்தால், கெராக்கானுடன் இணைந்து பணியாற்ற அவர்களுக்கு தங்கள் முழு ஆதரவு இருக்கும் என்று அவர் FMT ஊடகத்திற்கு வழங்கிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


அடுத்த பொதுத் தேர்தலில் டிஏபியுடன் இணைந்து பணியாற்றுவதில் அம்னோ இன்னும் பிடிவாதமாக இருந்தால் MCA கட்சி தனியாகச் செல்லத் தயங்காது என்று ரஸாலி கோடி காட்டினார்.

கெராக்கான் தலைவர் டொமினிக் லாவ்,  PN இன் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ளும் வரை, MCA உட்பட எந்தக் கட்சியுடனும் வேலை செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில்,  பாஸ் கட்சியின் மகளிரணி தலைவர் நூரிதா சலே, MCA - PN இல் சேருவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி பேசுவது மிக விரைவில் என்று கூறியுள்ளர்.

ஒரு சிறந்த மலேசியாவை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட விரும்பும் எந்தவொரு கட்சியையும் தாங்கள் வரவேற்கத் தயாராக இருப்பதாக பெரிக்காத்தான் தரப்பு தெரிவித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *