MCA உடன் இணைந்து பணியாற்ற கெராக்கான் தயார்!

top-news
FREE WEBSITE AD


MCA பாரிசான் நேஷனல்  கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்தால், MCA உடன் மீண்டும் ஒருமுறை உறவுகளை உருவாக்கத் தயாராக இருப்பதாக கெராக்கான் தரப்பு தெரிவித்துள்ளது.

கூட்டணியின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ள முடிந்தால், MCA உட்பட, Perikatan Nasional (PN) உடன் இணைந்து பணியாற்ற விரும்பும் எவருக்கும் தனது கட்சி திறந்திருக்கும் என்று கெராக்கான் தலைவர் டொமினிக் லாவ் தெரிவித்தார்.

கெராக்கான் மற்ற கட்சிகளின் விவகாரங்களில் தலையிடாது என்று குறிப்பிட்ட அவர்,  அது அவர்களின் பிரச்சனை என்றும், இருப்பினும், மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதில் எங்கள் சித்தாந்தத்துடன் உடன்படும் அனைவரையும் PN வரவேற்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

MCA PNன் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ள முடிந்தால், கெராக்கான் அதனுடன் ஒத்துழைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை," என்று அவர் கூறினார்.  MCA உடனான ஒத்துழைப்பு கெராக்கான் மற்றும் பிற PN கூறு கட்சிகளுக்கு அறிமுகமில்லாத ஒன்று அல்ல என்று அவர் நினைவுறுத்தினார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *