இஸ்ரேலின் அத்துமீறல்! – மலேசியா கண்டனம்

top-news
FREE WEBSITE AD


காஸாவில் உள்ள ரஃபா மீது இஸ்ரேல் நடத்திய அண்மைய தாக்குதலில் 19 பேர் பலியான சம்பவம் தொடர்பாக மலேசியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 எகிப்து மற்றும் கத்தார் ஏற்பாட்டிலான  அமைதிப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட  போர்நிறுத்த முன்மொழிவை ஹமாஸ்  ஏற்றுக்கொண்ட போதிலும்,  இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அமைதி  முயற்சிகளுக்கு  ஒத்துழைக்க இஸ்ரேல்  விரும்பாததை தெளிவாகக் காட்டுகிறது என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்   குற்றச் செயல்களைப் புரிவதை  நிறுத்துவதற்கான முயற்சிகளை சர்வதேச சமூகம் இரட்டிப்பாக்குவதோடு,  அனைத்துலக மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின்படி அந்நாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மலேசியா வலியுறுத்தியது.

அனைத்துலக சமூகத்திடம் இருந்து இஸ்ரேல் கடுமையான கண்டனங்களைப் பெற வேண்டும். பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் அத்துமீறலை சர்வதேசம் முடக்க வேண்டும் என  மலேசியா கேட்டுக்கொண்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *