கூகுள் தலைவரை சந்தித்தார் அன்வார்!

top-news
FREE WEBSITE AD

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் கூகுள் தலைவரும்,  அதன் தலைமை முதலீட்டு அதிகாரியுமான ரூத் போரட் இடையே இரு தரப்பு சந்திப்பு  நடைபெற்றது.

கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயத் துறைகளில் ஒத்துழைப்பின் முக்கியத்துவம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து செயற்கை நுண்ணறிவை (AI) ஆதரிப்பதன் அவசியம் குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நடைபெற்ற இரு தரப்பு சந்திப்பின்போது,  மலேசிய வணிகங்கள், டிஜிட்டல் போட்டித்தன்மைக்கான திறன் திட்டங்கள், டிஜிட்டல் உள்கட்டமைப்பில் முதலீடு, AI கண்டுபிடிப்புகள் மற்றும் 'கிளவுட்-ஃபர்ஸ்ட்' கொள்கைகள் மூலம் உதவுவதற்கான மூலோபாய ஒத்துழைப்பை அறிவித்ததாக அன்வார் கூறினார். 

அரசாங்கத்தின் நோக்கம் மற்றும் கவனம் குறித்து, மலேசியாவில் தொழில்நுட்ப நிறுவன விரிவாக்கத்தின்  முன்னேற்றம் குறித்து,  ரூத் போரட் தன்னிடம் தெரிவித்ததாக அன்வார் கூறினார்.

இந்த முயற்சிகள் இறுதியில் எந்தவொரு சமூகத்தையும் விட்டுவிடாமல் விரிவான பொருளாதாரம் மற்றும் சமூக நன்மைகளைக் கொண்டு வர வேண்டும் என்று தாம் வலியுறுத்தியதாகவும், இந்த முயற்சிகள் பலனளிக்கும் என்று தாம்  நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக நாட்டின் தொழில்நுட்ப மாற்றம் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற அம்சங்கள் தொழில்நுட்ப கல்வியறிவின் அடிப்படையில் அமையும் என்று அன்வார் தெரிவித்துள்ளார்.

கூகுளின்  தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட், மலேசிய அரசாங்கத்தின் தலைமை, அர்ப்பணிப்பு மற்றும் எளிதாக்கும் வேகத்தை வரவேற்றதாக அன்வார்  தெரிவித்தார்.

கடந்த நவம்பரில் சான் பிரான்சிஸ்கோ அரசு முறை பயணத்தின் போது,  ரூத் போரட், கூகுள் ஆசியா பசிபிக் தலைவர் ஸ்காட் பியூமண்ட் மற்றும் கூகுள் அரசாங்க விவகாரங்கள் மற்றும் பொதுக் கொள்கையின் உலகளாவிய துணைத் தலைவர் கரண் பாட்டியா ஆகியோரை அன்வார் சந்தித்தார். 

கடந்த வியாழன் அன்று, முதலீட்டு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு, மைக்ரோசாப்ட் கார்ப் அடுத்த நான்கு ஆண்டுகளில் மலேசியாவில் கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பில் RM10.5 பில்லியன் முதலீடு செய்யும் என்று அறிவித்தது. 

2021 ஆம் ஆண்டில், உயர் அளவிலான தரவு மையங்களை உருவாக்கவும் கிளவுட் சேவைகளை வழங்கவும் ஐந்து ஆண்டுகளில் மலேசியாவில் 4.12 பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்வதாகவும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *