பிரச்சாரத்தில் அரசு நிதியா? ஸ்டீவன் சிம் மறுப்பு!

top-news
FREE WEBSITE AD




கோலகுபு பாரு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, அரசாங்கம் கூட்டாட்சி நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக எதிர்க்கட்சிகளின் கூற்றை பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் ஒருங்கிணைப்பாளர் ஸ்டீவன் சிம் மறுத்துள்ளார்.

பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், எதுவும் முறைகேடு நிகழவில்லை என்று  அவர் கூறினார்.

அந்தக் கூற்று பொய்யானது என்றும், தாம் கூட தனது சொந்த காரில்தான் அங்கு வந்ததாகவும்  நேற்று இரவு உலு சிலாங்கூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

PAS பொதுச்செயலாளர் தகியுதின் ஹாசனின் கூற்றுக்கு  அவர் இவ்வாறு பதிலளித்தார்.

ஒற்றுமை அரசாங்கம் அதன் நிதியை துஷ்பிரயோகம் செய்ததற்கான ஆதாரம் உள்ளது, இது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு சமம் என்று பெரிக்காத்தான் நேஷனல் தரப்பு கூறியது.

மே 11ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றால், தேர்தல் மனுவை கூட்டணி தாக்கல் செய்யும் என்றும் தக்கியுதீன் கூறினார்.

எவ்வாறாயினும், தேர்தல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய எந்தவொரு கட்சிக்கும் உரிமை உண்டு என்று  மனிதவள அமைச்சருமான சிம் கூறினார்.

இடைத்தேர்தலுக்கு முன்னதாக கோலகுபு பாருவில் பொது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சின் RM5.21 மில்லியன் ஒதுக்கீட்டின் அறிவிப்பை, தேர்தல் சீர்திருத்தக் குழு பெர்சே முன்பு விமர்சித்திருந்தது.

பெர்சேவின் விமர்சனம் பற்றி கேட்கப்பட்டபோது, ​​அறிவிப்பு வெளியிடப்பட்ட நிகழ்வின் "ஒழுங்கமைப்பாளரிடம்" கேள்வியை அனுப்புவது சிறந்தது என்று சிம் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *